அம்மாவின் அருள்வாக்கு - பன்றி காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு:
சக்தி ஒருவர் அருள்திரு அம்மாவிடம் பாத பூஜை செய்து
பன்றிக் காய்ச்சல்வராமல் பாதுகாத்து கொள்ள அறிவுரை கேட்கப்பட்டபோது, அம்மா கூறிய நான்குஅறிவுரைகள் பின் வருமாறு:
ஐஸ்கிரீம் மற்றும் குளிர் சாதன பானங்களை தவிர்க்க வேண்டும்.
புது மண் சட்டியில் வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை மரத்தின் வேரையும் போட்டு, அதனுடன் காய்ச்சி ஆற வைத்த குடி தண்ணீரை ஊற்றி வைக்கவும். இந்த தண்ணீரை தினமும் பருகி வர வேண்டும்.
அசைவ உணவுகளை குளிர் காலம் முடியும் வரை தவிர்க்க வேண்டும்.
குளிர்சாதன பெட்டியில் இருந்து பயன் படுத்தப்படும் உணவுப்பொருட்களை அப்படியே பருகாமல், அதை சுட வைத்து பின்னர் உண்ண வேண்டும்.
அம்மா கூறிய இந்த நான்கு அறிவுரைகளையும், எல்லா சக்திகளும் தத்தம் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு எடுத்து உரைக்குமாறு அருள்திரு அம்மா அவர்கள் நமக்கு அறிவுரை கூறியுள்ளார்கள்.
இன்று உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் பன்றிக்காய்ச்சலுக்கு (Swine Flu) அன்னை அருளிய தடுப்பு மருந்து:
"வேப்பிலை, துளசி, மஞ்சள் ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து நன்றாக அறைத்து (like paste) அதை இரண்டு வாச் பட்டை(Watch strap) அளவுள்ள இரண்டு துணிகளில் நனைத்து, அதனை இரண்டு கைகளின் மணிக்கட்டுகளிலும் சுற்றிக் கொள்ள வேண்டும். அவை மூன்று நாட்களுக்கு அப்படியே இருக்க வேண்டும்.
மூன்று நாட்களும் :
(1) ஒரு வேப்பிலை, ஒரு துளசியை காலையில் சாப்பிட வேண்டும்,(2) அசைவ உணவு சாப்பிடக் கூடாது.(3) குளிர்சாதன பெட்டியில் வைத்த எதையும் சாப்பிடக் கூடாது.(4) குளிர்சாதன அறையில் உறங்கக்கூடாது.மூன்று நாள் கழித்து அந்த துணிகளை எடுத்து ஓடும் நீரில் விட்டு விட வேண்டும்."
இந்த அற்புதமான எளிய மருந்தை நீங்களும் பயன்படுத்துங்கள், உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Mother Goddess Melmaruvathur Adhiparasakthi’s Medicine to prevent Swine Flu:To Prevent Swine Flu Mother Goddess Adhiparasakthi’s has given some medicine today.
“Take equal portion of Neem leaves, Tulsi leaves and Turmeric; grind them as paste.
Take two pieces of cloths like watch strap, deep the cloth pieces in to the paste and tie in your two wrists. Keep them for three days in your wrists.
For these three days:
(1) Take a neem leave and a Tulasi leave in the mornings.(2) Do not take non-vegetarian foods.(3) Do not eat any food preserved in Refrigerator.(4) Do not sleep in Air-conditioned rooms.At the end of the third day, remove the cloths strap from your wrists and throw them in running water.”
Please use this simple and divine medicine and forward it to your friend and relatives to prevent swine flu.
Omsakthi!
அன்னையின் அருள்வாக்கு:மக்களின் மனநிலைக்கு ஏற்பவே
இங்கு மாரியும் இருக்கும்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:ஆன்மிகம்:அழிவுதான் முடிவு:"ஆன்மிகத்தில் ஈடுபடாமல் பாவத்திற்கு மேல் பாவம் செய்துகொண்டே போனால் அழிவுதான் ஏற்படும்."
இறுதிவரை முக்கியத்துவம்:"உங்கள் படிப்பு; பணம்; உத்தியோகம்; இவற்றுக்கெல்லாம் ஒரு காலத்தில் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும். உங்கள் ஆன்மிக ஈடுபாட்டிற்கு மட்டும் எப்போதும் முக்கியத்துவம் உண்டு."
எல்லாம் நானே !"கொடுப்பதும் நான் தான்; பறிப்பதும் நான் தான். இனிப்பும் நானே ! நல்லதும் நானே ! கெட்டதும் நானே !
ஆன்ம பரிபக்குவம் ஏற்பட்டால் தான் இது புரியும்.
என்னிடம் நம்பிக்கை வைத்தவர்கள் வீண் போவதில்லை."
அன்னையின் அருள்வாக்கு:பக்தி அதிகமாவது அமாவாசையில் தான்.
கருத்தரிப்பும், வளர்வதும் இருட்டில் தான்.
ஆன்ம வலிமை:"ஆன்ம வலிமை இருந்தால் உங்களுக்கு எந்த வலியும் தெரியாது."
மரம்: மனிதன்:"மரத்திலிருந்து தான் இலை, பூ, காய், கனி என்பன தோன்றுகின்றன. அதுபோலவே மனிதன் உள்ளத்திலிருந்து தான் விருப்பு, வெறுப்பு, நல்லது, கெட்டது என்ற எண்ணங்கள் தோன்றுகின்றன."
மனிதன் மிருகமாகிவிடுவான்:"ஆன்மிகத் தொண்டும், வழிபாடும், ஆன்மா வளர்ச்சியும் இல்லாவிட்டால் மனிதன் மிருகமாக மாறிவிடுவான்."
ஒருவன் தன்னைத் தானே அறிவது; தன்னைத் தானே உணர்வது;
தன்னைத் தானே புரிந்து கொள்வதே ஆன்மிகம்.
மரமும் - மனிதனும்:"மரம் சாய்ந்து விட்டால் பயனுண்டு. மனிதன் சாய்ந்து விட்டால் பயனில்லை."
தெய்வ விக்கிரகம்:" பொம்மையை (விக்கிரகம்) வைத்துக் கொண்டு பித்தலாட்டம் நடத்தக் கூடாது. அந்தப் பிம்பத்தை ( சிலையயை ) வைத்துக் கொண்டு இந்தப் பிம்பத்தை (தெய்வத்தை) ஏமாற்றக் கூடாது."
இன்பம் துன்பம்உங்களை நான் புடம்போட்ட தங்கமாக உருவாக்கவே உங்களுக்குத் தாள முடியாத வேதனைகளையும் பல சோதனைகளையும் அளிக்கிறேன். துன்பத்தின் மூலம்தான் சிறந்த அனுபவம் கிட்டும். அதை அனுபவித்தே பெற வேண்டும். இவ்வுலகத் துன்பங்களையும் ஊழ்வினைகளையும் நீங்கள் இப்போதே என் முன்னாலேயே அனுபவித்துக் கழித்து விட வேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு
Joy and Sorrow“In order to shape you as purified gold, I give you unbearable agonies and several trials and tribulations. You gain significance only through sorrow. You should gain that only by experiencing that. You must finish experiencing the fruit of your evil actions of the past birth, and the sorrow due to your actions in the present, now itself, in my presence.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle
ஆலமரமும் - தருமமும்ஆலமரம் விழுதுகளை ஊன்றித் தன்னையும் பாதுகாத்துக் கொள்கிறது. மற்றவர்களையும் பாதுகாக்கிறது. அதுபோல நீங்கள் தருமம் என்னும் விழுதுகளை ஊன்றி உங்களைப் பாதுகாத்துக் கொள்வதுடன் மற்றவர்களுக்கும் பயன்படுமாறு வாழவேண்டும். ஒரு விதை பல பழங்களாகின்றது. ஒரு கிளை பல கிளைகளாகின்றது. ஒரு குலை பல மரக்குலைகளாகின்றது. அதுபோல நீ தனி ஒருவனாக இருந்தாலும் பலருக்கு நன்மை செய்து வாழவேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு
The Banyan Tree – Charity“By sending its root firmly down, the banyan tree protects itself and also protects others. Similarly you should send down your roots of charitable actions for protecting yourself and for being useful to others. A seed becomes many fruits, a branch grows into many branches, a bunch become several of the tree. Similarly, though you are a single individual, you should always involve in activities that will ensure the welfare of many people.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle
அன்னையின் அருள்வாக்கு:சக்தி எந்த ரூபம்? தருமம் எந்த ரூபம்?
என்பது உங்களுக்குத் தெரியாது.
ஆன்மாவில் அழுக்கு சேரக்கூடாது:"உள்ளுக்குள் பொறாமைக்குணம் இருக்ககூடாது. பாசம் இருக்கலாம். அது பாவமாக மாறிவிடக் கூடாது. சிரிப்பு இருக்கலாம் அது வஞ்சகச் சிரிப்பாக இருக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது ஆன்மாதான். அந்த ஆன்மாவில் அழுக்கு சேராதபடிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்."
உடல்: உயிர்: ஆன்மா:"ஈசலுக்காகப் புற்று அமைந்திருப்பது போல உயிருக்காக உடலும், உடலுக்காக ஆன்மாவும் அமைந்திருக்கின்றன."