புதன், 23 டிசம்பர், 2009

தைப்பூசம் - சக்திமாலை இருமுடி விரதம்

தைப்பூசம் - சக்திமாலை
 
இருமுடி விரதம்
 
அன்னை ஆதிபராசக்தி தன அவதார காலத்தில் மக்கள் நலம் பெற வேண்டிக் கொடுத்த வாய்ப்புகள் பல. அவற்றுள் சக்தி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி செலுத்தும் வாய்ப்பும் ஒன்று.
 
சக்தி மாலை அணிந்து இருமுடி ஏந்தி விரதம் இருந்து மேல்மருவத்தூர் வந்து கருவறையில் சுயம்பான அன்னைக்கு அவரவரும் தங்கள் கைகளால் அபிழேகம் செய்யும் வாய்ப்பு நமக்கெல்லாம் ஓர் அறிய வாய்ப்பு.
 
உடல் நலம் பெற, ஊழ்வினை அகல, திருமணம் நடந்தேற, மகபேறு வாய்க்க, கல்வியில் மேம்பாடு அடைய, பில்லி சூனியம் என்னும் பெரும்பகை அகல, குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் மேலோங்கிட, விவசாயத்தில் வளம் பெருகிட, தீய சகவாசம் அகன்று நல்லொழுக்கத்துடன் வாழ்ந்திட, அவரவர் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற, சக்தி மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி செலுத்தி அன்னையைச் சரணடைந்தால் அவரவர் வினைகளைக் களைந்து, விதியையும் மாற்றி அமைப்பவள் நம் அம்மா.
 
இருமுடி விரத முறை
 
1ஒரு வேளை உணவைத் தவிர்க்க வேண்டும். இரண்டு வேளை நீராடி, செவ்வாடை உடுத்தி, அன்னையைத் தொழுது வழிபட வேண்டும்.
 
2உறங்கும் பொது செவ்வாடை பரப்பி அதன்மீது உறங்க வேண்டும்
 
3.ஐம்புலன்களை அடக்கி, அன்னையின் திருநாமத்தை இடைவிடாமல் நெஞ்சில் நிறுத்தி, அன்றாடக் கடமைகளில் ஈடுபட வேண்டும்.
 
4காலையில் வீட்டிலுள்ள படத்திற்கு முன்பும், மாலையில் மன்றக் கூட்டு வழிபாட்டிலும் அன்னையைத் தொழுதிட வேண்டும்.
 
பயன்கள்
 
குடும்பத்தோடு அன்னையைத் தொழும் பேறு, குடும்ப அழுக்கு போக்கும். உடல் நலம் பெறலாம். ஊழ்வினை அகலும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பில்லி சூனியம் விலகும். கண் திருஷ்டி நீங்கும். கெட்ட சக்திகள் விலகும். திருவருளும் கிடைக்கும்.

ஓம்சக்தி அமாவாசை வேள்வி-பலன்கள்

ஓம்சக்தி
 
அமாவாசை வேள்வி
 
1998 ஆண்டு ஆனி மாதம் முதல் நம் சித்தர் பீடத்தில் அமாவாசை தோறும் வேள்வி நடக்கிறது. ஓம் சக்தி மேடை
எதிரில் இந்த வேள்விப் பூசை நடக்கிறது.
 
பக்தர்கள் வரிசைப்படி அதர்வண பத்ரகாளி எனப்படும் பிரத்தியங்கரா தேவியை வலம் வர வேண்டும். அங்கே வேள்விக் குச்சியும், நவதானியமும் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொண்டு நம் அன்னையின் ஆலயத்தையும், பிரகாரத்தையும் சுற்றி வலம் வர வேண்டும்.
 
கருவறை அன்னையை தரிசித்து விட்டு வந்ததும், துளசியும், வேப்பிலையும் கொடுப்பார்கள். அவற்றை அங்கேயே சாப்பிட வேண்டும்.
 
ஓம்சக்தி மேடையையும், வேள்விக் குண்டத்தையும் நெருங்குவதற்கு முன்னால் நாலு கால் மண்டபத்திற்கு வரும் போதே கையில் உள்ள வேள்வி குச்சியையும், நவதானியத்தையும் கொண்டு தலையைச் சுற்றி வேள்வி குண்டத்தில் இட வேண்டும். அதுவும் எப்படி தெரியுமா?
 
வலமிருந்து இடப்புறம் நோக்கி மூன்று தடவை! இடப்புறமிருந்து வலப்புறம் நோக்கி மூன்று தடவை, நம் தலையைச் சுற்றி கழித்து யாககுண்டத்தில் போட வேண்டும்.  அந்த யாக குண்டத்தில் கலந்து கொள்வதில் பெரிய விசேஷம்  இருக்கிறது. அம்மாவே அங்கே வந்து அமர்ந்து கொண்டு நமக்கு தரிசனம் கொடுக்கிறார்கள்: வேள்விப் பூசைக்கும் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.
 
ஏவல், பில்லி, சூனியம் துன்பங்களை வேரறுக்கும் சக்தி அந்த அதர்வண பத்ரகாளி!  எல்லாவற்றையும் அம்மா ஒரு காரணத்தை வைத்துத்தான் கொடுத்திருக்கிறார்கள்.
 
இறந்து போன தாய் தந்தையர்க்கும், முன்னோர்க்கும் உரிய பிதிர்க்கடன்களை"பித்ரு தோஷம்" இன்றைய தலைமுறை செய்வதில்லை. அதனால் ஏற்பட்டுப் பல துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அத்தகையவர்கள் இந்த வேள்வியில் ஆகுதி கொடுப்பதன் மூலம் அந்த தோஷம் நீங்கும்.
 
யாக குண்டத்தில் வேள்விக் குச்சியும், நவதானியமும் செலுத்திவிட்டுப் பூசை முடிந்த பிறகு நீராடிவிட்டு அங்கப் பிரதட்சணம் வரவேண்டும். அதன்பிறகு கருவறைக்குப் பின்னாலே தியானம் செய்ய வேண்டும்.
 
ஓம்சக்தி

சக்திமாலை இருமுடி அணிந்தால்

ஓம் சக்தி! பரா சக்தி!


குருவடி சரணம்! திருவடி சரணம்!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:


தருமம் அழிகிற போது அதர்மம் தலை தூக்கும்


அதர்மம் தலை தூக்கும் போது அழிவுகள் தலை தூக்கும்.


அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:


இருமுடி:


மாந்தரிகம் அழியும்:


"இருமுடி அணிந்தால் உங்களுக்கெதிரான மாந்தரிகம் அழியும்."


ஆன்மிகம்:

பரம்பரையைக் காப்பாற்றிக் கொள்:

" உன் ஆன்மாவை நல்ல முறையில் வைத்துக் கொண்டு உன் பரம்பரையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்."

உடல் நலம்:

"சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத முடியும்". நல்ல உடல்நலம் இருந்தால்தான் வாழ்க்கையை அனுபவித்து நன்றாக வாழ முடியும். வரும் முன் காப்பதே நலம். நோய் வந்த பின்பு அவற்றிற்குச் சிகிச்சை செய்யும் பொழுது ஏற்படும் சிரமங்களும் செலவுகளும் மிக அதிகம். அதனால்தான் 'அம்மா' நோய் வராமல் தடுப்பதற்குப் பல எளிய மருந்துகளை அருளியுள்ளாள். அவற்றைத் தவறாமல் கடைபிடித்தால் நோயின்றி வாழ முடியும்.


நோய்கள் வராமல் தடுக்க:-

நோயின்றி வாழ 'அம்மா' பல வழிமுறைகளை கூறியுள்ளாள். அவைகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றினால் போதுமானது.

தினமும் மூன்று வேப்பிளையைத் தவறாமல் சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகவும் நல்லது.
Blog Widget by LinkWithin