செவ்வாய், 22 ஜூன், 2010

வெள்ளிக்கிழமை ராகுகால பூஜை முறைகளும் ஸ்லோகங்களும்

சுக்கிரவார(வெள்ளிக்கிழமை) ராகுகால பூஜை. 
15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
11 வாரங்கள் ஸ்ரீதுர்க்காதேவியை அமிர்தகடிகை நேரத்தில் (11.30 - 12.00) மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பழம் பாக்கு வைத்து வணங்கி சுமங்கலி பெண்களிற்கு கொடுக்கவும். இதனால் திருமணத்தடை நீங்கும். மாங்கல்ய பலம் பெருகும். (கண்டிப்பாக எலுமிச்சை பழ தீபம் ஏற்றக்கூடாது)

மங்களவார(செவ்வாய்க்கிழமை) பூஜை.
ஸ்ரீதுர்க்காதேவி சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை 4.00 - 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை சாதம், எலுமிச்சைபழ மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.
துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப்;பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் பத்திரகாளி அவதரித்த வேளையாதலால் அந்த நேரத்தில் காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.

கிரக சர்ப்ப சாந்தி.

பாம்பினை அடிப்பதால் வரும் தோசம்;, முன்னோர்களினால் வந்த நாக தோசம்; நீங்க செம்பு அல்லது வெள்ளியினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள் பூஜை செய்து வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதிற்க்கட்டி ஆறு போன்ற ஓடுகின்ற தண்ணீரில் போடவேண்டும். அன்று குறைந்தது 5 ஏழைகளிற்கு அன்னதானம் செய்ய வேண.டும்.
1. ராகு கால பௌர்ணமி பூஜை - பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.
2. ராகு கால கிருத்திகை பூஜை - புகழ் தரும்.
3. ராகு கால சஷ்டி பூஜை - புத்திரப்பேறு கிடைக்கும்.
4. ராகு கால ஏகாதசி பூஜை - பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.
5. ராகு கால சதுர்த்தி பூஜை - துன்பங்களிலிருந்து விடுதலை தரும்.
எந்த விதமான சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

கேது பகவான்.

ராகுவின் உடற்பிரிவின் மறு அம்சம் கேதுவாகும். இதன் தலைப்பகுதி நாக வடிவும் உடற்பகுதி மனித வடிவும் உடையது. கேதுவின் அதிபதி சித்திரகுப்தர். கேது திசை, கேது புத்தி நடப்பவர்கள் வினாயகர் வழிபாடு செய்வது நலம் பயக்கும். கேது ஞானம், மோட்சம் தருபவர். ஜாதகத்தில் கெட்ட ஸ்தானத்தில் இருக்கும் போது தீய நண்பர்கள் சேர்க்கை, சண்டை சச்சரவு, வெட்டுக்காயங்கள், விபத்துக்கள், வீண் வழக்குகள், பிரிவினைகளை ஏற்படுத்துவார்.
கேதுவின் நல்லருள் பெற காணப்பயறு(கொள்ளு) கலந்த அன்னம் படைத்து, தர்ப்பை புல் சாற்றி, பல வர்ண அல்லது சிகப்பு நிற ஆடை அணிவித்து, செவ்வல்லி அல்லது செந்நிற மலர்கள் கொண்டு வழிபட வேண்டும். வைத்திய தொழில் செய்பவர்கள் கேது வழிபாட்டினால் சிறப்படைவர்.

ராகு, கேது ஸ்தலங்கள் திருப்பதி அருகிலுள்ள திருக்காளஹஸ்தி, கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம் ஆகும்.

விளக்குத்திரி தரும் பலன்கள்.

1. பஞ்சுத்திரி - வீட்டில் மங்களம் நிலைக்கும்.
2. தாமரைத்தண்டுத்திரி - முன்வினைப் பாவம் நீக்கும். செல்வம் தரும்.
3. வாழைத்தண்டுத்திரி - தெய்வ குற்றம் நீக்கி மனச் சாந்தி தரும். புத்திரபேறு உண்டாகும்.
4. வெள்ளெருக்கன் பட்டைத்திரி - வறுமையைப் போக்கும். கடன் தொல்லை தீரும். பெருத்த செல்வம் சேரும்.

விளக்கேற்றும் திசைகள்

1. வடக்குத்திசை - தொழில் அபிவிருத்தி. செல்வம் சேரும்.
2. கிழக்குத்திசை - சகல சம்பத்தும் கிடைக்கும்.
3. மேற்குத்திசை - கடன்கள் தீரும். நோய் அகலும்.
4. தெற்குத்திசை - இந்த திசையில் தீபம் ஏற்றக்கூடாது

விளக்கேற்றும் எண்ணெய் வகைகள்.

1. பசு நெய் - மோட்சம் கிடைக்கும். பாவங்கள் தீரும். மகாலட்சுமி அருள் கிடைக்கும்.
2. விளக்கெண்ணெய் - குடும்ப சுகம் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
3. இலுப்பையெண்ணெய் - குலதெய்வ அருள் கிடைக்கும். முன்னோர் சாபங்கள், முற்பிறவிப் பாவங்கள் நீங்கும்.
4. நல்லெண்ணெய் - கடன்கள் தீரும். நோய்கள் நீங்கும்.
5. தேங்காயெண்ணெய் - வினாயகரிற்கு மட்டும் தான் இதில் தீபமேற்ற வேண்டும். திருமணத்தடை நீங்கும்.
6. முக்கூட்டு எண்ணெய் - பசுநெய், விளக்கெண்ணெய், இலுப்பையெண்ணெய் மூன்றும் சமஅளவில் கலந்தது முக்கூட்டெண்ணெயாகும். இதில் தீபம் ஏற்றுவதால் தேவ ஆகர்~ணம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். செல்வம் சேரும்.

ஐந்தெண்ணெய் தயாரிக்கும் போது வேப்பெண்ணெய் சேர்க்கக்கூடாது. பசுநெய்யுடன் நல்ணெ;ணெய் கலப்பதும் தவறானது. எந்த காரணத்தைக் கொண்டும் கடலையெண்ணெய், சன் ஆயில் கொண்டு தீபம் ஏற்றக்கூடாது. இதனால் தெய்வ சாபம், தரித்திரம் உண்டாகும்
==========
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி  சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்(ஜெய)

துர்க்கை அம்மனை துதித்தால் என்றும்
துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயும் அவளே
தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் ஓடும் சர்வ மங்களம் கூடும்(ஜெய )

பொற் கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றி வரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்கும பொட்டும் வெற்றி பாதையை காட்டும்
ஆயிரம் கரங்கள் உடையவளே
ஆதிசக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே
தாய்போல் நம்மை காப்பவளே (ஜெய)

சங்கு சக்கரம் வில்லும் அம்பும்
மின்னும் வாளும் வேலுடன் சூலமும்
தங்கக் கைகளில் ஏந்தி நிற்பாள் அம்மா ...
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்
திங்களை முடி மேல் சூடி நிற்பாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள்
மங்கையர்க்கரசியும் அவளே
அங்கையர்கண்ணியும் அவளே (ஜெய..)

ராகு கால துர்க்கா அஷ்டகம் (ஹரிவராசனம் மெட்டில் பாடவும் )
வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கு மானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

உலகை ஈன்றவள் துர்க்கா  உமையு மானவள்
உண்மை யானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா  நித்யை யானவள்
 இலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

செம்மையானவள் துர்க்கா  ஜெயமுமானவள்
அம்மையான்வல் அன்புத் தந்தை யானவள்
இம்மையான்வல் துர்க்கா   இன்பமான்வல்
மும்மை யானவள் என்றும் முழுமை  துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

உயிருமானவள் துர்க்கா உடலுமான்வல்
உலக மானவள் எந்தன் உடமை யானவள்
பயிறு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

துன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

குருவுமானவள்  துர்க்கா குழந்தையானவள்
குலமுமான்வல் எங்கள் குடும்ப தீபமே
திருவுமான்வல் துர்க்கா திருசூலி மாயவள்
திரு நீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

ராகுதேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டிநீன்
ராகுதுர்க்கையே  என்னைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

கன்னி துர்க்கையே இதயக் கமலா துர்க்கையே
கருணை துர்க்கையே வீரக்ககனத் துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

( "தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே" என்ற நாமம் வரும்போது விரதம் இருப்பவர்கள் நமஸ்க்காரம் செய்வது மிகவும் நல்லது )
Blog Widget by LinkWithin