செவ்வாய், 15 செப்டம்பர், 2009

வயது உடலுக்கே: ஆன்மாவுக்கு அல்ல: அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

எல்லாச் சுழற்ச்சிக்கும் பூமி தான் ஆதாரம்.
ஆதலின் பூமி தான் தாய்!

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
மொழிகளும் ஆன்மாவும்:

"பொருட்களின் பெயர்கள் மொழிக்கு மொழி மாறுபடும். அனால் ஆன்மா என்பது எல்லோருக்கும் ஒன்று. அதை எந்த மொழியிலும் மாற்ற முடியாது."

வயது உடலுக்கே: ஆன்மாவுக்கு அல்ல:

"எழுபது வயது; எண்பது வயது; தொண்ணூறு வயது என உடலுக்கு வயதாகுமே தவிர, ஆன்மாவுக்கு வயது கிடையாது."
__________________________________________________

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

அருளுக்கும், பொருளுக்கும்
தருமமும், தொண்டும் தான் வழி.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மாவிற்கு நோய் வந்தால்:

"உடம்பில் உள்ள எலும்பு, நரம்பு இரத்த ஓட்டம் என எல்லாவற்றிற்கும் நோய் வந்தால் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஆன்மாவிற்கு நோய் வந்தால் தாங்க முடியாது. அதற்கு மருத்துவம் கிடையாது.

உன் ஆன்மா தான் ஆதிபராசக்தி! உன் ஆன்மா இறுதியில் காற்றோடு காற்றாய் பிரிந்து விடுகிறது. தூசு பறக்க வேண்டுமானால் காற்று தேவை. உடம்பிலிருந்து ஆன்மா பிரியவும் காற்று தேவை.

பிறப்பு - இறப்பு - எடுப்பது - கொடுப்பது எல்லாமே நான் தான்."

அடிப்படை ஆன்மா தான்:

"கண்ணினால் பார்வையும், பார்வையால் ஒளியும் கிடைக்கிறது. காதினால் ஒலியைக் கேட்க முடிகிறது. நாவினாலும் தொண்டையினாலும் பேச்சு கிடைக்கிறது. கை கால்களால் செயல்பட முடிகிறது.

எல்லா அறிவும் ஒன்றுபட்டுச் செயல்படும்போதுதான் உள்ளம் நல்லதை எண்ணி நல்லதைச் செய்ய முடியும்.

எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது ஆன்மா தான்."
__________________________________________________

"இப்படி இருந்தால் தான் இந்தச் சமுதாயத்தில் வாழலாம் என்று வாழக்கூடாது. இப்படித்தான் வாழவேண்டும். இப்படித்தான் வாழ்வேன் என்று எடுத்துக்காட்டாக வாழவேண்டும்.

நீ உனக்காக வாழ்கிறாய்
மற்றவர்களுக்காக உன் வாழ்க்கை திரிந்துவிடக் கூடாது. பத்துபேர் மதிக்க வாழவேண்டும் என்பதற்காக எப்படியும் வாழக்கூடாது."

அன்னையின் அருள்வாக்கு
__________________________________________________
How Should You Live?

“You must be principled when it comes to living in society. You should set an example for the same. Live for yourself. You should not lead your life in any way in order to please others.”

– Mother Goddess Adhiparasakthi’s
Oracle

__________________________________________________

ஆன்மிகத்திற்கு வந்துவிட்ட பிறகு மனம் திருந்தி வாழ்வதற்கே முயலவேண்டும். அதை விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆராய்ச்சி செய்வது தேவையற்றது. அதனால் உனக்குக் காலம் தான் வீணாகும்."

அன்னையின் அருள்வாக்கு

__________________________________________________

Analyzing is Unnecessary

“Once you have entered spirituality you should try to lead a reformed life. Asking question after question and analyzing is unnecessary. You merely waste your time.”

– Mother Goddess Adhiparasakthi’s
Oracle

__________________________________________________
Blog Widget by LinkWithin