செவ்வாய், 27 அக்டோபர், 2009

மற்றவனைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாது

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
பொய்யும், பித்தலாட்டமுமே இன்றைய அழிவுகளுக்கு முக்கியக் காரணம்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:
ஆன்மாவை உணர வேண்டுமானால்.....
"மனிதர்களுக்குக் கண், காது, மூக்கு, பல் என அழகான உறுப்புகள் அமைந்திருந்தாலும் ஒரு புகைப்படம் எடுத்து அந்தப் படத்தைப் பார்த்துத்தான் ரசிக்க முடிகிறது.அதுபோல் உன் உள்ளே ஆன்மா என ஒன்று இருந்தாலும் உள்ளத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளால்தான் அதனை உணர முடியும்.

கல்லுக்குள் ஈரம் இருப்பதுபோல, உங்கள் உள்ளத்திற்குள் வளர்ச்சி இருக்க வேண்டும். உழைக்க வேண்டும், மற்றவர்கட்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். மற்றவனைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாது."

சோதிடம் நாடி அலையாதே

அம்மாவிடம் வந்தோம்; நம்முடைய கஷ்டம் தீரவில்லையே என்று நினைக்கக்கூடாது. எந்தச் சோதனை, கஷ்டம் வந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு ஜாதகம், சோதிடம், நாடி என்று போனால் அவன் இன்ன தோஷம் இருக்கிறது; இன்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுவான். உனக்குப் பணம் தான் செலவாகும். தலைவலி போக மருந்து சாப்பிட்டால் ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும்." - அன்னையின் அருள்வாக்கு

Don’t Go After Astrology
“Do not think that your problems are not solved despite your coming to Adhiparasakthi AMMA. You should endure your trials, sorrows and worries. Instead if you approach the astrologers with horoscopes, he will point out certain flaws and atonement. You will incur expenses. If you take medicine for head ache, you will start suffering from cold.”  – Mother Goddess Adhiparasakthi’s Oracle

சனி, 10 அக்டோபர், 2009

ஆன்மா பழுது பட்டால்.... அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

 ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்ற வரும் ஏற்றமிகு விழாவே தைப்பூச ஜோதி.
  அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
 ஆன்மிகம்:
அடக்கி ஆள்வது ஆன்மா தான்:
"ஆன்மிகத்தில் அமைதியும் நிம்மதியும் இருக்க வேண்டும். பொறாமையும் பொச்சரிப்பும் இருக்கக் கூடாது. ஒருவரைப் பற்றி மற்றவர் கோள் சொல்வதும், புறம் பேசுவதும் கூடாது. இத்தகைய தகாத பழக்கங்களை வைத்துக் கொண்டு ஆன்மிகத்தில் ஈடுபட்டும் எனக்கு அமைதியும், நிம்மதியும் கிடைக்கவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை.

மனத்தை அடக்கி ஆளவேண்டும். மனத்தையும் அவயங்களையும் அடக்கி ஆள்வது ஆன்மா தான் என்றாலும் மனத்தை அடக்கி ஆன்மாவைப் பக்குவ நிலைக்குக் கொண்டுவர வேண்டும்."
ஆன்மா பழுது பட்டால்....
"பந்தம், பாசம், பணம் என்றெல்லாம் உங்களை ஆடவைப்பது ஆன்மா தான். வண்டி பழுது பட்டு விட்டால் பழுது பார்த்து ஓட வைக்கலாம். ஆனால் மனிதனின் ஆன்மா என்ற இயந்திரம் பழுதுபட்டுவிட்டால் ஒன்றும் செய்ய இயலாது."

அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப்பட்க் கூடாது

"என்னுடைய மரம் விழுந்துவிட்டதே! அவன் வைத்த மரம் விழவில்லையே என்று நினைக்காதே! உன் அறிவீனத்தால் ஆழமாக நடாமல் மேலோட்டமாக நட்டுவைத்தாய். அதனால் அந்த மரம் சீக்கிரம் விழுந்துவிட்டது. அடுத்தவன் ஆழமாக நட்டான். அக்கறையாக மரம் வளர்த்தான். அதனால் விழவில்லை. எனவே அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப்பட்க் கூடாது. " - அன்னையின் அருள்வாக்கு

should not become envious of another person.
Do not think that the tree that you have grown has been uprooted whereas the tree planted by another man has not fallen flat! It is because of your ignorance that you have planted it superficially instead of planting it deeply. Hence the tree has fallen down. The other person has planted it deeply. He has nourished the tree with utmost care. That is why it has not fallen down. Hence you should not become envious of another person.” - Mother Goddess Adhiparasakthi’s Oracle

மன அழுக்கை நீக்கும் பக்தி- அன்னையின் அருள்வாக்கு

அழுக்கை நீக்கும் பக்தி
"உங்கள் மனத்தில் உள்ள அழுக்கை அகற்றிக் கொள்ள வேண்டும்; அறியாமையை அகற்றிக் கொள்ள வேண்டும். மெழுகுவத்தி எரியும் போது அதனுடன் உள்ள அழுக்கும் சேர்ந்து எரியும். அதுபோல உங்களிடம் பக்தி கொழுந்துவிட்டு எரிந்தால் உங்களிடம் உள்ள அழுக்குகளும் அறியாமைகளும் சேர்ந்து எரிந்து மறைந்து விடும்." - அன்னையின் அருள்வாக்கு


Devotion that Removes the Dirt
 You should get rid of the dirt and ignorance in your mind. A candle burns along with its impurities. Similarly when the devotion in you burns brightly, all your mental impurities and ignorant thoughts will get burnt along with it.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

பாவச்செயல்களுக்கு மன்னிப்பு -அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:
பௌர்ணமி தினத்தில் குருவிற்கு பாதபூசை செய்து தான் செய்த பாவச்செயல்களுக்கு மன்னிப்பு கேட்பது நல்லது.

 அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
 ஆன்மிகம்:

ஆன்மா பிரிவது எப்போது?
"ஆன்மா எப்பொழுது நினைக்கிறதோ அப்பொழுதுதான் உன்னை விட்டுப் போகும்."

ஆன்மாவை கட்டுப் படுத்து:
"ஒரு இயந்திரம் எப்படி ஒரு குறிப்பிட்ட மின் வேகத்திற்குக் கட்டுப் படுகிறதோ, அதுபோல் ஆன்மாவையும் ஒரு கட்டுப்பாட்டோடு வைத்துக் கொள்ள வேண்டும்."

ஆன்மாவும் இரத்த ஓட்டமும்: அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:
தாய்பால் கொடுப்பதால் தான் குழந்தைக்கு தாய்ப்பாசம் அதிகம் ஏற்படுகிறது.

 அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
 ஆன்மிகம்:

ஆன்மாவும் இரத்த ஓட்டமும்:
"உன் உள்ளே இருக்கும் ஆன்மாவும், உள்ளே ஓடும் இரத்த ஓட்டமும் ஒரே சீராக இருக்க வேண்டும். அதற்கு ஆன்மிகம் தான் சுலபமான வழி."
உனது பொறுப்பு:
"உன் உள்ளே இருக்கும் ஆன்மா என்னுடையதுதான் என்றாலும் அதை நீ உன்னுடையதாக நினைத்து இயக்கிப் பதப்படுத்த வேண்டும்.
உன் எண்ணத்தையும், பார்வையையும் கட்டுப்படுத்த வேண்டும். அந்தப் பொறுப்பு உன்னுடையது."

ஆன்மாவில் படியும் அழுக்குகள்:அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
 எங்கும் தேடி அலையாமல், விலை கொடுத்து வாங்கவும்
முடியாமல், விற்கவும் முடியாமல் இருப்பது  பக்தி ஒன்று தான்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
 ஆன்மிகம்:
ஆன்மாவே உறுதுணை:
"ஆன்மா தான் உடலை இயக்குகிறது. அதுதான் உணவில் ஆசையைத் தூண்டுகிறது. அதுவே உணவில் ஆசை, மற்றவற்றில் ஆசைகளை ஏற்படுத்துகிறது. இவ்வளவுதான் அளவு! என்று சொல்வதும் ஆன்மா தான். பிற உயிர்களைச் சிரிக்க வைப்பதும், பாடவைப்பதும், ஆட வைப்பதும் ஆன்மா தான். உங்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக இருப்பதும் ஆன்மா தான்!"

ஆன்மாவில் படியும் அழுக்குகள்:
"கண்ணாடியில் தூசுபடிந்து விட்டால் அடிக்கடித் துடைத்துச் சுத்தப்படுத்திப் பயன்படுத்துகிறீர்கள். அதுபோல் ஆன்மாவிலும் ஆசை, அகந்தை, பொறாமை, கோபம் முதலிய அழுக்குகள் படிகின்றன. அந்த அழுக்குகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆன்மாவை ஒரு நிலைப்படுத்திப் பக்குவப் படுத்த வேண்டும். ஆன்மா என்ற சக்தி உடலை விட்டுப் போய் விட்டால் எதுவும் இல்லை."

மனக்கட்டுப்பாடும் - மன அமைதியும்- அன்னையின் அருள்வாக்கு

மனக்கட்டுப்பாடும் - மன அமைதியும்
"வயிற்றுவலி வந்துவிட்டதே என்று மருந்து சாப்பிடுகிறாய், அது குணமாகவில்லையென்றால் மறுபடியும் அது எதனால் வந்தது என்று பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டு வேறு ஒரு மாற்று மருந்து சாப்பிடுகிறாய். அதுபோல மனமானது அமைதியைத் தேடுகிறது. அது கிடைக்காவிட்டால் மீண்டும் முயற்சி செய்! உன் மனத்தைக் கட்டுக் கோப்புடன் வைத்துக் கொண்டால் உனக்கு அமைதி கிடைக்கும்." - அன்னையின் அருள்வாக்கு

Self – control and peace
 If you suffer from pain in the stomach you take in medicines. If you are not cured, you go for a medical check-up and an alternative medicine. Your mind seeks peace. If you do not get it, then search again. If you keep your mind under your control then you will get peace.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

அகங்காரமும் - அருளும் - அன்னையின் அருள்வாக்கு

 அகங்காரமும் - அருளும்
உன்னுடைய ஆர்வம் தூய்மையானதாக இருக்கும்போது நீ அகங்காரத்தை எவ்வளவுக்கெவ்வளவு நீக்குகின்றாயோ அவ்வளவுக்கவ்வளவு என் அருள் உன்னிடம் நிறையும். அகங்காரம் குறையக்குறைய அருள் நிரம்பும். அருள் நிரம்ப நிரம்ப அகங்காரம் குறையும். அருளை நிரப்புவது என் கடமை! அகங்காரத்தைச் சிறிது சிறிதாகப் போக்கிக் கொள்வது உங்கள் கடமை." - அன்னையின் அருள்வாக்கு

 Arrogance – Grace
When your enthusiasm is genuine, my Grace will be proportionate to your efforts to eliminate your arrogance. My grace will abound in accordance with the elimination of your arrogance and as grace abounds your arrogance will get eliminated, it is my duty to fill you with Grace! It is your duty to eliminate arrogance.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

ஆன்மாவில் அழுக்கு அதிகம் படிகிறபோது:அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
கலைகள், கவலைகள், பொருள்கள்,
பொறாமைகள் என்றைக்குமே ஆபத்தானவை.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
 ஆன்மிகம்:
ஆன்மாதான் அம்மா!
"உங்கள் உள்ளே இருக்கும் ஆன்மா தான் அம்மா! அம்மா தான் ஆன்மா!"
ஆன்மாவில் அழுக்கு அதிகம் படிகிறபோது:

 "அழுக்குத் துணிகளை மூட்டையாகக் கட்டிக் கழுதைமீது வண்ணான் சுமத்துகிறான். அது சுமக்காவிட்டால் - முரண்டு பிடித்தால் சூடு போட்டுச் சுமக்க வைப்பான். அவன் சூடுபோட்டுப் பணிய வைப்பது போல உங்கள் ஆன்மாவில் அழுக்குகள் அதிகம் சேர்கிறபோது அதற்கேற்றபடி அடிகொடுக்கிறேன். உங்களைப் பண்படுத்துகிறேன். பக்குவப் படுத்துகிறேன்."

மனத்தை அலைபாய விடாதே- அன்னையின் அருள்வாக்கு

மனத்தை அலைபாய விடாதே
 இலவம் பஞ்சு ஓட்டுக்குள் இருப்பது. அதைப் பக்குவமாக எடுத்துப் பயன்படுத்தினால் தலையணையாகவோ, மெத்தையாகவோ செய்யலாம். காற்றில் விட்டுவிட்டால் பயன்படாமல் போகும். அதுபோல உன்மனத்தை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்திப் பக்குவத்துக்குத் கொண்டுவர வேண்டும். அப்போது தான் நீ நல்ல காரியங்களை வெற்றி பெறச் செய்ய முடியும். இல்லையேல் உன் மனம் தீய செயல்களில் ஈடுபட ஆரம்பித்துவிடும்." - அன்னையின் அருள்வாக்கு


Do Not Let Your Mind Wander

Cotton is carefully preserved in the pods. It could be put to good use either for making a pillow or a mattress. If it is let loose in the air it will be of no use. The mind is similar to cotton. It should be kept under control. Only then you will do good work and attain victory. Otherwise your mind will start involving itself in evil activities.” - Mother Goddess Adhiparasakti’s Oracle

நல்ல சீவன் சிவனாக மாறும்.ஆன்மிக சக்தியாக மாறும்:

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
------------------------------------------------------------
நல்ல சீவன் சிவனாக மாறும்.
ஆன்மிக சக்தியாக மாறும்:
"தெய்வ சக்தி மனித சக்தியாக மாறி, அந்த மனித சக்தி விஞ்ஞான சக்தியாக வளர்ச்சி பெற்றதையே இதுவரை உலகம் கண்டு வந்தது. அது மீண்டும் ஆன்மிக சக்தியாக மாறும்."

ஆன்மாவின் இயல்பு:
"வீட்டில் வைத்து வளர்க்கும் பறவைகளுக்கும்; விலங்குகளுக்கும் எவ்வளவு சிறந்த உணவைக் கொடுத்தாலும் வெளியே சென்று இரை தேடி உண்ணவே விரும்பும். அதுபோல் உன் ஆன்மாவை எவ்வளவு பக்குவப் படுத்தினாலும் உனக்குக் கட்டுப்படாமல் தடுமாறும்; பாவத்தைத் தேடும்."
---------------------------------------------------------------
Blog Widget by LinkWithin