சனி, 27 டிசம்பர், 2014

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்


1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

பழமை வாய்ந்த இந்துக் கோயில்கள் கொண்ட ஆகம விதிகளும் அதன் காரணங்களும்

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா "ஃபாஸ்ட்ஃபுட்" கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்துக் கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்தக் கோயில்களின் சரியான அமைவு. இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்கள், மலைகள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் உகந்த இடங்கள்.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்தச் சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும். பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்கப் பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறையக் கோயில்களின் கீழே அதுவும் இந்தக் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்புத் தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த சக்தியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று பக்கம் மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்குக் கதவுகள் இருக்கும். இது அந்த சக்தியை விரயம் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்தச் சக்தி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு சக்தி வழக்கமாக கோயிலுக்குச் செல்லும் ஆட்களுக்குத் தெரியும் ஒருவித இனம்புரியாத சக்தி அந்தக் கோயிலில் கிடைக்கும் என்று.
அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் சக்திச்சுற்றுப் பாதை இது தான். அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே சக்திச் சுற்றுப்பாதை கூடச் சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பிலும் மனதிலும் சக்தி/ வலு வந்து சேரும். இந்தக் காந்த மற்றும் ஒருவித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பிரபஞ்ச சக்தி (பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி) ஆகும்.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும். அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதைச் சுற்றிக் கண்ணாடி அது செயற்கை ஒளிவட்டம் வருவதற்க்கு அல்ல. அது அந்தச் சக்தியை அப்படித் திருப்பும் ஒரு உக்தியாகும்.
அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த சக்தியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான "எனர்ஜி ஃபேக்டரிதான்" மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு அறையில் நீங்கள் செய்து பாருங்கள். இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும். ஆனால் கோயிலில் உள்ள இந்தக் கர்ப்பக்கிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.
அது போகக் கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த சக்தியை ஒவ்வொரு நாளும் கூட்டிக்கொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.
இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை வழக்கமாக உட்கொண்டவர்களுக்கு இது ஒரு நோயெதிர்ப்பு "ஆன்டிபயாட்டிக்" என்றால் மிகையில்லை..
இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பைப் பரிசுத்தமாக்குவதற்காகவேத் தரப்படுகின்றது..
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்தப்படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்தத் தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவைத் திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக சக்தி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும்போது தான் கதவை அல்லது திரையைத் திறப்பார்கள். அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும். அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரக் காரணமும் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம். அந்த சக்தி அப்படியே மார்புக் கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேர வேண்டும் என்பதனால்தான் நம் முன்னோர்கள் அவ்வாறு வகுத்தனர்.
பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான். நிறையப் பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல "பாஸிட்டிவ் எனர்ஜியை" வாங்கி கொழுப்பைக் கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் சக்தியை அப்படியே பற்றிக் கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல்சிலையின் முன் வைத்து எடுப்பதனால் என்ன பலனென கேட்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், தொடர்ச்சியான வழிபாடுகளால் ஒருமுகப்படுத்தப்பட்ட பிரபஞ்ச சக்தியின் இருப்பிடமே அச்சிலை. அந்தச் சக்திதான் நாம் வழிபடும்போது அங்கிருந்து நம்மில் படும். பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு சக்தி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு "எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான்" இந்தக் கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்தப் பரிகாரத்திற்க்கும் ஒரு நேரடி "வயர்லெஸ்" தொடர்பு உண்டென்றால் அது மிகையாகாது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் காந்த அலைகள் (மேக்னெட்டிக் வேவ்ஸ்) மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது. கோயில்களில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்தக் கலசங்கள் ஒரு சிறந்த மின்கடத்தி. ஆம்! இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட "லைட்னிங் அரெஸ்டர்ஸ்".
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளிப்பிரகாரத்தை காக்கும் இன்னொரு காப்பரண் (டெக்னிக்கல் புரட்டக்டர்). கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்டது ஏனென்றால் எல்லா "ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல்" செய்யும் ஆற்றல் இம்மரங்களுக்கு உண்டு..
இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் .நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். இவ்வாறான கோயில் சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட இந்தச் சக்தி ஒரு மாற்றத்தை அவர்களுள் ஏற்படுத்துவதனாலேயே கோயில்களில் இவர்கள் அமைதியாகின்றனர்.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும், சர்க்கரைப் பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்தச் சக்தி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்தக் கோயில் "டெக்னாலஜி".

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

அரங்கனின் அரவணை! பெருமாளின் மடப்பள்ளியும் நித்ய நைவேத்யங்களும்

பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கனின் ஹோலி கிச்சனை… மன்னிக்கவும்… அரங்கனின் மடப்பள்ளியை எட்டிப் பார்க்கலாம் என்கிற எண்ணம் வந்தது.
இராஜ மகேந்திரன் திருச்சுற்று மதிலுக்கு வெளியே பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் தென்கிழக்கு மூலையில் அமையப் பெற்றுள்ளது ஸ்ரீரங்கம் கோயிலின் மடப்பள்ளி. வைகுண்ட நாதனான பெருமாளுக்கும், வையகத்து நாயகியான தாயாருக்கும் ஆறு கால பூஜைக்கும் இங்கிருந்து தான் நைவேத்ய பிரசாத அன்னங்கள் தயாரித்து அனுப்பி வைக்கப்படுகின்றன. திருக்கோயில் மடப்பள்ளிக்குள் புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. அதனால் என்ன? பூஜிக்கப்பட்ட நைவேத்ய அன்னங்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றியது. அரங்கனின் மடப்பள்ளி மகத்துவத்தை, பூஜிக்கப்பட்ட நைவேத்ய அன்னங்களே பறை சாற்றி விடும் அல்லவா?
காலை 8.45 மணிக்கு திருவாரதனம். கோதுமை ரொட்டி படைக்கப்படுகிறது. பெருமாளுக்கு பதினொன்று, தாயாருக்கு ஆறு. ரொட்டியின் செய்நேர்த்தியை பற்றி விளக்குகிறார் கோயிலில் இருபத்தைந்து ஆண்டுகளாக மடப்பள்ளி நாச்சியார் பரிகலமாகப் பணியாற்றி வரும் ரெங்கன்.
வெல்லத்தை நைசாகத் தேய்த்து இழைக்கணும். அந்த ஈரப்பதத்தோட கோதுமை மாவு போட்டு நல்லா பிசையணும். வெல்லமும் மாவும் இரண்டறக் கலந்ததும் உருண்டைகளாகப் பிடிச்சு கையில தட்டணும். அதனை நெய்யில் போட்டு பொரித்து எடுக்கணும். பெருமாளுக்கான ரொட்டி ரெடி. காய்ச்சாத பசும்பால் இரண்டு லிட்டர். மண் ஓட்டில் வெண்ணெய், உப்பு போட்டு வேக வைத்த பாசிப்பருப்பு.
அடுத்து தொடர்ந்தாற்போல வந்து விடுவது பொங்கல் பூஜை. காலை ஒன்பது மணிக்கு, மிளகு, சீரகம் இடாமல் பாசிப்பருப்பு, பச்சரிசி மட்டும் உபயோகித்து வெண் பொங்கல். இதற்கு கத்தரிக்காய் அல்லது வாழைக்காய் அல்லது வெள்ளைப் பூசணி வெட்டிப் போட்டு தினமும் ஒரு வகை காய்கறியமுது. பச்சரிசி உளுந்து மாவு தோசை. பெருமாள் வைத்தியரான தன்வந்திரி தயாரித்து அளிப்பதான ஜீரண மருந்து. சுக்கு, வெல்லம், சீரகம், ஏலக்காய்ப் போட்டு இடிச்சு அரைத்த மருந்து.
மதியம் 12.30 முதல் 1.30 வரை உச்சி கால பூஜை. இதற்குப் பெரிய அதிசரம் என்று பெயர். பெரிய அதிரசம் பதினொன்று. பதினெட்டு படி தளிகை (வெறும் சாதம்), பாசிப்பருப்பு கறியமுது. தக்காளி சேர்க்காமல் புளி, மிளகு, சீரகம், இட்ட ரசம் இதற்கு சாத்தமுது என்று பெயர். அரிசி, பாசிப்பருப்பு, பால், வெல்லம் இட்ட பாயசம். இதற்கு கண்ணமுது என்று பெயர்.
மாலை ஆறு டு ஏழு. சீராண்ணம் பூஜை. உளுந்து வடை பெரியது பதினொன்று. பெரிய அப்பம் ஆறு. பெரிய தேன் குழல் எனப்படும் அரிசி முறுக்கு ஆறு. பால், பச்சரிசி, வெல்லம் இட்ட பால் பொங்கல் இது அரை இனிப்பாக இருக்கும். இவற்றில் தாயாருக்கு மட்டும் கூடுதலாக வெல்லம் இட்ட பச்சரிசிப் புட்டு. இரவு ஒன்பது முப்பது மணிக்கு செலவு சம்பா. எட்டுப்படி வடிசல் சாதம், பாசிப் பருப்பு என்று முடித்தார் ரெங்கன்.
காலை முதல் இரவு அரவணை வரைக்குமாக பெருமாளுக்கும் தாயாருக்கும் வைத்து பண்ணப்படும் நைவேத்ய அன்னங்கள் யாவுமே, உடனே ஸ்ரீ பண்டாரம் வந்து சேர்ந்து விடும். பக்தர்களுக்கும் பெருமாள் நைவேத்ய பிரசாதம் போலவே பல அன்னங்களும் பணியாரங்களும் மிகவும் செய்நேர்த்தியுடன் ஆத்மார்த்தமாகத் தயாரிக்கப்பட்டு திருக்கோயில் பிரசாத ஸ்டால்களில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது!” என்கிறார் பணியாளர்களில் ஒருவரான மாதவன்.
இரவு பத்து மணிக்கு பெருமாளுக்கு அரவணை பூஜை. ஆறுகால பூஜை வேளை நைவேத்யங்களிலேயே இரவு அரவணை தான் மிகவும் ஹைலைட். அதனைப் பெற்றுக் கொள்ள இரவு பதினோரு மணியளவில் கூட, கோயிலின் ஸ்ரீ பண்டாரம் மண்டபத்தில் பக்தர்களின் பெருங்கூட்டம் சேர்ந்து விடும். இரண்டரை படி பச்சரிசி, ஏராளமான நெய், ஏலக்காய், வெல்லம் இட்டு அரவணைப் பொங்கல். குங்குமப்பூ, ஏலக்காய் வெல்லம் இட்டு சுண்டக் காய்ச்சிய பசும்பால். (காலையில் காய்ச்சாத பால். இரவு காய்ச்சிய பால்) இதில் தாயாருக்கு மட்டும் ஸ்பெஷலாக அரவணைப் பொங்கலுடன், மிளகுக் குழம்பு (உப்புச்சாறு என்பார்கள்) நெய் விட்டு வேகவைத்த முளைக்கீரை.
இரவு ஒன்பதரை மணிக்கு மேலாக தாயாருக்கு பூஜித்த அரவணை, ஸ்ரீ பண்டாரம் வந்து சேரும் பக்தர்களுக்காக. அடுத்து இரவு பத்தரை மணிக்கு மேலாக அரங்கனுக்குப் பூஜித்த அரவணை, பக்தர்களுக்காக ஸ்ரீ பண்டாரம் வந்து சேரும். பிறகென்ன? போட்டி போட்டு பக்தர்கள் பெற்றுச் செல்வார்கள். அதன் ருசியே தனி. பூலோக வைகுண்டத்தின் இனிய அமுது தான் அரங்கனின் அரவணை.
திருக்கோயில் மடப்பள்ளியில் மண்பாண்டங்கள் தான் சமையல் பாத்திரங்கள். அடுப்பெரிய மர விறகுகள் தான் அடுப்பு. எத்தனையோ நவீனங்கள் வந்து விட்டாலும், மடப்பள்ளிக்குள் புராதன நடைமுறைகளே கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு காலை ஒன்பது முதல் இரவு ஒன்பது மணி வரை தினசரி அன்னதானம்.
சராசரியாக ஒரு நாளைக்கு மூவாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம். அதற்கான கிச்சனோ அத்தனை சுத்தம்.
–நன்றி மங்கையர் மலர்

திங்கள், 28 ஜூலை, 2014

சகல கஷ்டங்களையும் நீக்கும் ஸ்ரீ தேவி கட்கமாலா அஷ்டோத்திர சதநாமாவளி

ஸ்ரீஜெயதுர்கா,ஜெயதுர்கா பீடம் ,படப்பை,தமிழ்நாடு












































ஓம் ஸ்ரீ த்ரிபுரஸுந்தர்யை நம
ஓம் ஹ்ருதயதேவ்யை நம
ஓம் சிரோதேவ்யை நம
ஓம் சிகாதேவ்யை நம
ஓம் கவசதேவ்யை நம
ஓம் நேத்ர தேவ்யை நம
ஓம் அஸ்த்ரதேவ்யை நம
ஓம் காமேச்வர்யை நம
ஓம் பகமாலின்யை நம
ஓம் நித்யக்லின்னாயை நம
ஓம் பேருண்டாயை நம
ஓம் வன்ஹிவாஸின்யை நம
ஓம் மஹாவஜ்ரேச்வர்யை நம
ஓம் சிவதூத்யை நம
ஓம் த்வரிதாயை நம
ஓம் குலஸுந்தர்யை நம
ஓம் நித்யாயை நம
ஓம் நீலபதாகாயை நம
ஓம் விஜயாயை நம
ஓம் ஸர்வமங்களாயை நம
ஓம் ஜ்வாலாமாலின்யை நம
ஓம் சித்ராயை நம
ஓம் மஹாநித்யாயை நம
ஓம் பரமேச்வர பரமேச்வர்யை நம
ஓம் மித்ரேசமய்யை நம
ஓம் ஷஷ்டீசமய்யை நம
ஓம் உட்டீசம்யயை நம
ஓம் சர்யாநாதமய்யை நம
ஓம் லோபாமுத்ரமய்யை நம
ஓம் அகஸ்த்யமய்யை நம
ஓம் காலதாபநமய்யை நம
ஓம் தர்மாசாரமய்யை நம
ஓம் முக்தகேசீச்வரமய்யை நம
ஓம் தீபகலாநாதமய்யை நம
ஓம் தீபகலாநாதமய்யை நம
ஓம் விஷ்ணுதேவமய்யை நம
ஓம் ப்ரபாகரதேவமய்யை நம
ஓம் தேஜோதேவமய்யை நம
ஓம் மனோஜதேவமய்யை நம
ஓம் கல்யாணதேவமய்யை நம
ஓம் வாஸுதேவமய்யை நம
ஓம் ரத்னதேவமய்யை நம
ஓம் ஸ்ரீராமானந்தமய்யை நம
ஓம் அணிமாஸித்யை நம
ஓம் லகிமாஸித்யை நம
ஓம் கரிமாஸித்யை நம
ஓம் மஹிமாஸித்யை நம
ஓம் ரசித்வஸித்யை நம
ஓம் வசித்வஸித்யை நம
ஓம் ப்ராகாம்யஸித்யை நம
ஓம் புக்திஸித்யை நம
ஓம் இச்சாஸித்யை நம
ஓம் ஸர்வகாமஸித்யை நம
ஓம் ப்ராம்ஹ்யை நம
ஓம் மஹேச்வர்யை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் வாராஹ்யை நம
ஓம் மாஹேந்த்ரியை நம
ஓம் சாமுண்டாயை நம
ஓம் மஹாலக்ஷ்மியை நம
ஓம் ஸர்வஸம்÷க்ஷõபிண்யை நம
ஓம் ஸர்வவித்ராவிண்யை நம
ஓம் ஸர்வாகர்ஹிண்யை நம
ஓம் ஸர்வசங்கர்யை நம
ஓம் ஸர்வோன்மாதின்யை நம
ஓம் ஸர்வமஹாங்குசாயை நம
ஓம் ஸர்வகேசர்யை நம
ஓம் ஸர்வபீஜாயை நம
ஓம் ஸர்வயோன்யை நம
ஓம் ஸர்வத்ரிகண்டாயை நம
ஓம் த்ரைலோக்யமோஹனசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் ப்ரகடயோகின்யை நம
ஓம் காமாகர்ஷிண்யை நம
ஓம் புத்யாகர்ஷிண்யை நம
ஓம் அஹங்காராகர்ஷிண்யை நம
ஓம் சப்தாகர்ஷிண்யை நம
ஓம் ஸ்பர்சாகர்ஷிண்யை நம
ஓம் ரூபாகர்ஷிண்யை நம
ஓம் ரஸாகர்ஷிண்யை நம
ஓம் கந்தாகர்ஷிண்யை நம
ஓம் சித்தாகர்ஷிண்யை நம
ஓம் தைர்யாகர்ஷிண்யை நம
ஓம் ஸ்ம்ருத்யாகர்ஷிண்யை நம
ஓம் நாமாகர்ஷிண்யை நம
ஓம் பீஜாகர்ஷிண்யை நம
ஓம் ஆத்மாகர்ஷிண்யை நம
ஓம் அம்ருதாகர்ஷிண்யை நம
ஓம் சரீராகர்ஷிண்யை நம
ஓம் ஸர்வாசாபரிபூரகசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் குப்தயோகின்யை நம
ஓம்  அனங்ககுஸுமாயை நம
ஓம்  அனங்கமேகலாயை நம
ஓம்  அனங்கமதனாயை நம
ஓம்  அனங்கமதனாதுராயை நம
ஓம்  அனங்கரேகாயை நம
ஓம்  அனங்கவேகின்யை நம
ஓம்  அனங்காங்குசாயை நம
ஓம்  அனங்கமாலின்யை நம
ஓம்  ஸர்வஸம்÷க்ஷõபணசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் குப்ததரயோகின்யை நம
ஓம் ஸர்வஸம்÷க்ஷõபிண்யை நம
ஓம் ஸர்வவவித்ராவிண்யை நம
ஓம் ஸர்வாகர்ஷிண்யை நம
ஓம் ஸர்வாஹ்லாதின்யை நம
ஓம் ஸர்வஸம்மோஹின்யை நம
ஓம் ஸர்வஸ்தம்பின்யை நம
ஓம் ஸர்வஜ்ரும்பிண்யை நம
ஓம் ஸர்வரஞ்ஜின்யை நம
ஓம் ஸர்வோன்மாதின்யை நம
ஓம் ஸர்வார்த்தஸாதகாயை நம
ஓம் ஸர்வஸம்பத்திபூரண்யை நம
ஓம் ஸர்வமந்த்ரமய்யை நம
ஓம் ஸர்வத்வ்நதவக்ஷயங்கர்யை நம
ஓம் ஸர்வஸெளபாக்யதாயசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் ஸம்ப்ரதாயயோகின்யை நம
ஓம் ஸர்வஸித்திப்ரதாயை நம
ஓம் ஸர்வஸம்பத்ப்ரதாயை நம
ஓம் ஸர்வப்ரியங்கர்யை நம
ஓம் ஸர்வமங்களகாரிண்யை நம
 ஓம் ஸர்வகாமப்ரதாயை நம
ஓம் ஸர்வதுக்கவிமோசின்யை நம
ஓம் ஸர்வம்ருத்யுப்ரசமன்யை நம
ஓம் ஸர்வவிக்னநிவாரண்யை நம
ஓம் ஸர்வாங்கஸுந்தர்யை நம
ஓம் ஸர்வஸெளபாக்யதாயின்யை நம
ஓம் ஸர்வார்த்தஸாதக சக்ரஸ்வாமின்யை நம
ஓம் குலோத்தீர்ணயோகின்யை நம
ஓம் ஸர்வக்ஞாயை நம
ஓம் ஸர்வசக்த்யை நம
ஓம் ஸர்வைச்வர்யப்ரதாயின்யை நம
ஓம் ஸர்வக்ஞானமய்யை நம
ஓம் ஸர்வவ்யா திவினாசின்யை நம
ஓம் ஸர்வாதாரஸ்வரூபாயை நம
ஓம் ஸர்வாபாபஹராயை நம
ஓம் ஸர்வானந்தமய்யை நம
ஓம் ஸர்வரக்ஷõஸ்வரூபிண்யை நம
ஓம் ஸர்வேப்ஸிதபலப்ரதாயை நம
ஓம் ஸர்வரக்ஷõகர சக்ரஸ்வாமின்யை நம
ஓம் நிகர்பயோகின்யை நம
ஓம் வசின்யை நம
ஓம் காமேச்வர்யை நம
ஓம் மோதின்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் அருணாயை நம
ஓம் ஜயின்யை நம
ஓம் ஸர்வேச்வர்யை நம
ஓம் கௌளின்யை நம
ஓம் ஸர்வரோகஹர சக்ரஸ்வாமின்யை நம
ஓம் ரஹஸ்யயோகின்யை நம
ஓம் பாணின்யை நம
ஓம் சாபின்யை நம
ஓம் பாசின்யை நம
ஓம் அங்குசின்யை நம
ஓம் மஹாகாமேச்வர்யை நம
ஓம் மஹாவஜ்ரேச்வர்யை நம
ஓம் மஹாபகமாலின்யை நம
ஓம் ஸர்வஸித்திப்ரத சக்ரஸ்வாமின்யை நம
ஓம் அதிரஹஸ்யயோகின்யை நம
ஓம் ஸ்ரீஸ்ரீமஹாபட்டாரிகாயை நம
ஓம் ஸர்வானந்தமயசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் பராபர ரஹஸ்யயோகின்யை நம
ஓம் த்ரிபுராயை நம
ஓம் த்ரிபுரேச்யை நம
ஓம் த்ரிபுரஸுந்தர்யை நம
ஓம் த்ரிபுரவாஸின்யை நம
ஓம் த்ரிபுராக்ரியை நம
ஓம் த்ரிபுரமாலின்யை நம
ஓம் த்ரிபுராஸித்யை நம
ஓம் த்ரிபுராம்பாயை நம
ஓம் மஹாத்ரிபுரஸுந்தர்யை நம
ஓம் மஹாமஹேச்வர்யை நம
ஓம் மஹாமஹாராக்ஞ்யை நம
ஓம் மஹாமஹாகுப்தாயை நம
ஓம் மஹாமஹாக்ஞப்தாயை நம
ஓம் மஹாமஹாநந்தாயை நம
ஓம் மஹாமஹாஸ்கந்தாயை நம
ஓம் மஹாமஹாசயாயை நம
ஓம் மஹாமஹா ஸ்ரீசக்ரநகர ஸாம்ராக்ஞ்யை நம
நமஸ்தே நமஸ்தே ஸ்ரீ லலிதாம்பிகாயை நம.



சகல கலைகளிலும் தேர்ச்சி பெற
மகாகவி காளிதாஸர் அருளிய  சியாமளா தண்டகம்

 மாணிக்யவீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி
சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே
குசோன்னதே குங்குமராகசோணே
புண்ட்ரேக்ஷü பாசாங்குச புஷ்பபாண
ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத:

மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்ப வனவாஸினீ

ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸூகப்ரியே

ச்யாமளா தண்டகம்

ஜய ஜனனீ ஸூதா ஸமுத்ராந்த
ஹ்ருத்யன்மணி த்வீப ஸம்ரூட
பில்வாடவீ மத்ய கல்பத்ருமாகல்ப
காதம்ப காந்தார வாஸப்ரியே,

க்ருத்தி வாஸப்ரியே, ஸர்வலோகப்ரியே!
ஸாதராரப்த ஸங்கீத ஸம்ப்பாவனா
ஸம்ப்ரமாலோல நீ பஸ்ர காபத்த
சூளீஸநாத த்ரிகே, ஸானுமத் புத்ரிகே

சேகரீபூத சீதாம்சுரேகா மயூகாவளீபத்த ஸூஸ்நிக்த்த நீலாலகச்ரேணி ச்ருங்காரிதே, லோக ஸம்பாவிதே

காமலீலா தனுஸ்ஸன்னிப ப்ரூலதா புஷ்பஸந்தோஹ ஸந்தேஹ க்ருல்லோசநே, வாக்ஸூதா ஸேசனே சாரு கோரோசனா பங்க கேளீலலாமாபிராமே ஸூராமே ரமே


வஸந்தா
ப்ரோல்ல ஸத்வாளிகா மௌக்தி கச்ரேணிகா சந்த்ரிகா மண்டலோத்பாஸி லாவண்ய கண்டஸ்த்த லந்யஸ்த கஸ்தூரிகா பத்ரரேகா ஸமுத்ப்பூத ஸெளரப்ய ஸம்ப்ராந்த ப்ருங்காங்கனாகீத ஸாந்த்ரீ பவன் மந்த்ர தந்த்ரீ ஸ்வரே. ஸூஸ்வரே பாஸ்வரே.
வல்லகீ வாதன ப்ரக்ரியாலோல தாளீ தளா பத்த தாடங்க பூஷா விசேஷாந்விதேஸித்த ஸம்மானிதே.
சிம்மேந்திர மத்யமம்
திவ்ய ஹாலாம தோத்வேல ஹேலால ஸச்சக்ஷüராந் தோளன ஸ்ரீ ஸமாக்ஷிப் தகர்ணைக நீலோத்பலே, ச்யாமலே பூரிதா சேஷலோகாபிவாஞ்சாபலே நிர்மலே.
ஸ்வேத பிந்தூல்லஸத் பால லாவண்ய நிஷ்யந்த ஸந்தோஹ ஸந்தேஹ க்ருந்நாஸிகா மௌக்திகே ஸர்வ மந்த்ராத்மிகே.
அடாணா
ஸர்வ விச்வாத்மிகே காளிகே முக்த மந்தஸ் மிதோதார வக்த்ர ஸ்ப்புரத்பூக தாம்பூல கற்பூர கண்டோத் கரே ! ஜ்ஞான முத்ராகரே, ஸர்வ ஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே, ஸ்ரீகரே !
குந்த புஷ்ப த்யுதி ஸ்நிக்த தந்தாவலீ நிர்மலா லோல கல்லோல ஸம்மேளன ஸ்மேர  சோணாதரே, சாருவீணாதரே, பக்வ பிம்பாதரே
கல்யாணி
ஸூலலித நவயௌவனாரம்ப சந்த்ரோதயோத்வேல லாவண்ய துக்த்தார்ணவா விர்ப்பவத் கம்பு பிப்வோக ப்ருத் கந்தரே, ஸத்கலா மந்திரே, மந்தரே !
திவ்ய ரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா ஸமுத்யோதமானா நவத்யாம்சுசோபே சுபே
ரத்ன கேயூர ரச்மிச்சடா பல்லவப்ரோல்லஸத் தோர்வதா ராஜிதே, யோகிபி பூஜிதே:
தன்யாசி
விச்வ திங்மண்டல வ்யாபி மாணிக்ய தேஜஸ் ஸ்ப்புரத் கங்கணா லங்க்ருதே, விப்ரமாலாங்க்ருதே, ஸாதுபிஸ்ஸத்க்ருதே !
வாஸரா ரம்பவேளா ஸமுஜ்ரும்பமாணாரவிந்த ப்ரதித்வந்த்வி பாணித்வயே, ஸந்ததோத் யத்வயே, அத்வயே.
பைரவி
திவ்ய ரத்னோர்மிகா தீதிதிஸ்தோம ஸந்த்யாய மானாங்குளீ பல்லவோத்யந்தகேந்து ப்ரபாமண்டலே ஸன்னுதா (ஆ) கண்டலே, சித்ப்ரபா மண்டலே ப்ரோல்லஸத் குண்டலே தாரகா ராஜி நீகாச ஹாராவளி ஸ்மேர சாரஸ்தனா போக பாராநமன் மத்யவல்லீ ஸமுல்லாஸ, ஸந்தர்சிதாகார ஸெளந்தர்ய ரத்னாகரே, வல்லகீ ப்ருத்கரே கிங்கர ஸ்ரீ கரே.
நீலாம்பரி
ஹேம கும்போப மோத்துங்க வ÷க்ஷõஜ பாராவநம்ரே, த்ரிலோகாவநம்ரே லஸத் வ்ருத்தகம்பீரநாபீ ஸரஸ்தீர சைவால சங்காகர ச்யாமரோமாவளீ பூஷணே, மஞ்ஜூ ஸம்பாஷணே
சாவேரி
சாரு சிஞ்சத்கடீ ஸூத்ர நிர்ப்பர்த்ஸிதானங்க லீலாதனுச் சிஞ்ஜினீ டம்பரே, திவ்ய ரத்னாம்பரே பத்ம ராகோல்லஸன் மேகலா பாஸ்வர ச்ரோணி சோபாஜித ஸ்வர்ண பூப்ருத்தலே, சந்த்ரிகா சீதலே.
விகஸித நவகிம்சுகாதாம்ர திவ்யாம்சு கச்சன்ன சாரு சோப பரா பூத ஸிந்தூர சோணாயமானேந்த்ர மாதங்க ஹஸ்தார்களே, வைபவாநர்களே ச்யாமளே.
பிலஹரி
கோமலஸ் நிக்த்த நீலோத்பலோத் பாஸி தானங்க தூணீர சங்காகரோதார ஜங்க்காலதே, சாருலீலாகதே நம்ர திக்பால ஸீமந்தினீ குந்தள ஸ்நிக்த்த நீல ப்ரபாபுஞ்ஜ ஸஞ்ஜாத தூர்வாங்கு ராசங்க ஸாரங்கஸம்யோக ரிங்க்கன் நகேந்தூஜ்வலே, ப்ரோஜ்வலே.
செஞ்சுருட்டி
நிர்மலே ப்ரஹ்வ தேவேச, லக்ஷ்மீச பூதேச தைத்யேச, ய÷க்ஷச, வாகீச, வாணேச, கோணேச வாய்வக்னி கோடீரமாணிக்ய ஸங்க்ருஷ்ட பாலா தபோத் தாமலாக்ஷõரஸாருண்ய தாருண்ய, லக்ஷ்மீ க்ருஹீதாங்க்ரி பத்மேஸூபத்மே உமே.
மோகனம்

ஸூருசிர நவரத்ன பீடஸ்த்திதே, ஸூஸ்த்திதே, ரத்னஸிம் ஹாஸனே, ரத்ன பத்மாஸனே, சங்க்க பத்மத்வயோபாச்ரிதே தத்ரவிக்னேச தூர்வாவடு ÷க்ஷத்ரபாலைர் யுதே மத்தமாதங்க கன்யா ஸமூஹான் விதே, மஞ்ஜூலாமேனகாத்யங்க நாமானிதே, பைரவை ரஷ்டபிர் வேஷ்டிதே தேவி வாமாதிபிஸ் ஸம்ச்ரிதே, சக்திபிஸ்ஸேவிதே ! தாத்ரி லக்ஷ்ம்யாதி சக்த்யஷ்டகைஸ் ஸம்யுதே, மாத்ருகாமண்டலைர் மண்டிதே !
பைரவீஸம்வ்ருதே, யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலை ரர்ச்சிதே பஞ்சபாணாத் மிகே பஞ்சபாணேன ரத்யா ச ஸம்பாவிதே, ப்ரீதி பாஜாவஸந்தேன சாநந்திதே
கானடா

பக்தி பாஜாம் பரம் ச்ரேயஸே கல்பஸே, யோகினாம் மானஸே, த்யோதஸே, சந்தஸாமோஜஸா ப்ராஜஸே கீதவித்யா வினோதாதித்ருஷ்ணேன க்ருஷ்ணேன ஸம்பூஜ்யஸே பக்திமச் சேதஸா வேதஸா ஸ்த்தூயஸே, விச்வஹ்ருத்யேன, வாத்யேன வித்யாதரைர் கீயஸே ச்ரவணஹரண தக்ஷிண க்வாணயா வீணயா கிந்நரைர் கீயஸே.
சஹானா
யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலை ரர்ச்யஸே ஸர்வ ஸெளபாக்ய வாஞ்ச்சாவதீபிர் வதூபீஸ் ஸூராணாம் ஸமாராத் யஸே.
ஸர்வ வித்யா விசேஷாத்மகம் சாடு காதா ஸமுச்சாடனம் கண்ட மூலோல்லஸத் வர்ணராஜித்ரயம் கோமலம் ச்யாமளோதார பக்ஷத்வயம் துண்ட சோபாதி தூரீ பவத் கிம்சுகம்தம்சுகம் லாலயந்தீ பரிக்ரீடஸே.
நாதநாமக்கிரியை
பாணி பத்மத்வயேனாக்ஷமாலாமபி ஸ்ப்பாடிகீம் ஜ்ஞான ஸாராத்மகம் புஸ்தகம் சாங்குசம்பாஸமாபிப்ரதீயேன ஸஞ்சித்ன்த்யஸே  தஸ்ய வக்த்õரந்தராத் கத்ய பத்யாத்மிகா பாரதீ நிஸ்ஸரேத்.
யேன வாயா வகாபாக்ருதிர் பாவ்யஸே தஸ்ய வச்யா பவந்தி ஸ்த்ரிய:பூருஷா: யேந வா சா தகும் பத்யுதிர் பாவ்யஸே ஸோ (அ) பிலக்ஷ்மீ ஸஹஸ்ரை: பரிக்ரீடதே.
யதுகுலகாம் போதி
கிம் ந ஸித்யேத்வபு: ச்யாமலம் கோமலம் சந்த்ர சூடான்விதம்,தாவகம் த்யாயத: தஸ்ய லீலாஸரோவாரித: தஸ்ய கேளீவனம் நந்தனம் தஸ்ய பத்ராஸனம் பூதலம், தஸ்ய கீர்த்தேவதா கீங்கரீ, தஸ்யசாஜ்ஞாகரீ ஸ்ரீ: ஸ்வயம்
மத்மயாவதி
ஸர்வதீர்த்தாத்மிகே, ஸர்வமந்த்ராத்மிகே, ஸர்வ தந்த்ராத்மிகே, ஸர்வ யந்த்ராத்மிகே, ஸர்வபீடாத்மிகே, ஸர்வதத்வாத்மிகே, ஸர்வசக்த்யாத்மிகே, ஸர்வவித்யாத்மிகே ஸர்வயோகாத்மிகே, ஸர்வநாதாத்மிகே, ஸர்வசப்தாத்மிகே, ஸர்வவிச்வாத்மிகே, ஸர்வ தீக்ஷõத்மிகே, ஸர்வஸர்வாத்மிகே, ஸர்வகே ஹே ஜகன்மாத்ருகே பாஹி மாம் பாஹி மாம், பாஹி மாம், தேவி துப்யம் நமோ தேவீ துப்யம் நமோ தேவீ துப்யம் நம:
 

 

சனி, 25 ஜனவரி, 2014

உரைநடையில் கம்பராமாயணம் ஆசிரியர் : தஞ்சை வெ.கோபாலன்


இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் ஆகும். இரகு வம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும். (இராம+அயனம் = இராமாயணம்) இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.
 
கம்பர் இக்காப்பியத்தை அதன் மூலமான வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியை ஓர் அரிய உவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். பசியுடைய பூனை ஒன்று பாற்கடலைக் கண்டு அதை நக்கிக் குடித்துவிட ஆசைகொண்டதுபோல தன் முயற்சியை ஒப்பிடுகிறார். இது அவையடக்கமாகக் கொள்ளப்படுகிறது. கம்பர் இராமகாதையை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார். இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒருபாடல் எனும் வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடியுள்ளார்.

கேட்போர் படிப்போர் துன்பம் போக்கும் ராமர் பட்டாபிஷேக சர்க்கம் ஒலிவடிவில் தரவிறக்க:-

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
http://ta.wikipedia.org/s/1h
கம்பராமாயணத்தை தஞ்சை வெ.கோபாலன் அவர்கள் உரைநடையில் எழுதி கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிட்டுள்ளார். அதை மின்னூலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

ஆசிரியர் : தஞ்சை வெ.கோபாலன்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : கிரியேடிவ் காமன்ஸ்

பதிவிறக்க*

Blog Widget by LinkWithin