திங்கள், 6 ஜூன், 2011

அஷ்டம சனியின் இன்னல்கள் போக்கும் காஷ்யப முனிவர் அருளிய விநாயகர் கவசம்.


தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள்
-------------------------------------------------------

வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு
விநாயகர் காக்க வாய்ந்த சென்னி
அளவுபடா அதிகசவுந் தரதேக
மகோற்கடர்தாம் அமர்ந்து காக்க
விளரறநெற் றியை என்றும்விளங்கிய
காசிபர் காக்க புருவந்தம்மைத்
தளர்வில் மகோதரர்காக்க
தடவிழிகள் பாலசந் திரனார் காக்க.

உதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு
---------------------------------------------------------------------------

கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க
காலங்கணக் கிரீடர் காக்க
நவில்சிபுகம் கிரிசைசுதர் காக்க
நனிவாக்கைவிநா யகர்தாம் காக்க
அவிர்நகை மின் முகர் காக்க
அள் எழிற் செஞ் செவிபாச பாணி பாக்க
தவிர்தலுறா திளங் கொடிபோல் வளர்மணி
நாசியைச் சிந்தி தார்த்தர் காக்க.

முகம், கழுத்து, இணையான தோள்கள், முலை, உள்ளம், வயிறு
----------------------------------------------------------------------------------

காமருபூ முகந்தன்மைக் குணேசர்
நனி காக்க களக் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்குகந்த
பூர்வசர் தாம்மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கின விநாசன் காக்க
இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க
அகட்டினைத் துலங்கே ரம்பர் காக்க

பக்கங்கள், குறி, குய்யம், தொண்டைகள்
---------------------------------------------------
பக்கம் இரண்டையுந்தரா தரர்காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும்
விக்கினகரன் காக்க விளங்கிலிங்கம்
வியாளபூ டணர்தாம் காக்க
தக்ககுய்யந் தன்னைவக் கிரதுண்டர் காக்க
சகலத்தை அல்லல் உக்கண பன் காக்க
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க

முழங்கால்கள், இருகால்கள், இருகைகள், முன்கைகள்
----------------------------------------------------------------------

தாள்முழந்தாள் மகாபுத்தி காக்க
இரு பதம்ஏக தந்தர் காக்க
வாழ்கரம் க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க
முன்கையை வணங்கு வார்நோய்
ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க
விரல்பதும அத்தர் காக்க
சேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க
கிழக்கினிற் புத்தீசர் காக்க

திக்குகள் அனைத்திலிருந்தும்
---------------------------------------

அக்னியில் சித்தீசர் காக்க
உமா புத்திரர்தென் திசை காக்க
மிக்கநிரு தியிற்கணே சுரர் காக்க
விக்கினவர்த்தனர்மேற் கென்னுந் திக்கதனிற் காக்க
வாயுவிற் கசகர் ணன்காக்க
திகழ்உதீசி தக்கநிதி பன்காக்க
வடகிழக்கில் ஈசநந் தனரே காக்க

பகல், இரவு முதலிய காலங்களில் பிற தொல்லைகளிலிருந்தும்
----------------------------------------------------------------------------------

ஏகதந்தர் பகல்முழுதும் காக்க
இர வினும்சந்தி இரண்டன் மாட்டும்
ஓகையின் விக் கினகிருது காக்க
இராக் கதர்பூதம் உருவேதாளம்
மோகினிபேய் இவையாதி உயிர்திரத்தால்
வருந்துயரும் முடிவிலாத வேகமுறு பிணிபலவும்
விலக்குபு பாசாங்குசர்தாம் விரைந்துகாக்க

மானம், புகழ் முதலியவற்றையும், உற்றார், உறவினரையும்
-----------------------------------------------------------------------------

மதிஞானம் தவந்தானம்மானம் ஒளி
புகழ்குலம் வண்சரீரம் முற்றும்
பதிவான தனம்தானியம் கிரகம்
மனைவி மைந்தர் பயில்நட் பாதிக்
கதியாவும் கலந்து சர்வா யுதர்காக்க
காமர்பவுத் திரர் முன் னான
விதியாரும் கற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க

படிப்போர் யோற்றவராய் வாழ்வார்
--------------------------------------------

வென்றி சீவிதம் கபிலர் காக்க
கரி யாதியெல்லாம் விகடர் காக்க
என்றிவ்வா றிதுதனை முக்காலமும்
ஓதிடினும் பால் இடையூ றொன்றும்
ஒன்றுறா முனிவரவர்காள் அறிமின்கள்
யாரொருவர் ஓதினாலும்
மன்ற ஆங்கவர்தேகம் பிணியற வச்
சிரதேக மாகி மன்னும்

காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம் முற்றும்.

(இதை ஓதுபவர்கள் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற்றுப் பல்லாண்டு வாழ்வர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin