வெள்ளி, 31 ஜூலை, 2009

அலைவரிசைகளை அடிக்கடி மாற்றக்கூடாது: அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

மனத்தில் உள்ள அழுக்கை ஆன்மிகம்


என்னும் அலையானது வெளியேற்றுகிறது.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மிகம் என்ற மலைமேல் ஏறி வரும்போது...

" ஆன்மிகம் என்கிற மலைமேல் ஏறி வருகிறபோது பந்தம்,பாசம் என்கிற முட்கள் படர்ந்திருக்கும். அவை குத்தும். எனவே, பந்த பாசங்களை அப்புறப்படுத்திவிட்டு " அம்மா" என்கிற கயிற்றைப் பிடித்துக் கொண்டு எரிவரவேண்டும். ஐயோ கால் சுளுக்குமே என்ற சந்தேகமே வரக்கூடாது. அம்மாவின் அருள் கிடைக்கும் என்ற ஒரே சிந்தனையோடு மேலே ஏறிவர வேண்டும்."

அலைவரிசைகளை அடிக்கடி மாற்றக்கூடாது:

" வானொலிப் பெட்டியில் ஒரு அலைவரிசை சரியாக வரவில்லையென்றால் - ஒளியைக் கேட்க முடியவில்லையென்றால் அடுத்த அலைவரிசைக்கு மாற்றிக் கொள்கிறீர்கள். அதுபோல ஒரு தெய்வத்திடம் முழுமையாக நம்பிக்கை வைக்காமல் அடுத்த ஒரு தெய்வத்திடம் ஓடுகிறீர்கள்.

ஆன்மிகம் என்ற வானொலிப் பெட்டியில் அலைவரிசைகளை அடிக்கடி மாற்றக் கூடாது.

ஒருபுறம் மேல்மருவத்தூருக்கு என்று வருவது. இன்னொரு புறம்

நாடிஜோதிடம், ஜாதகம் என்றும் சினிமா, அரசியல் என்றும் அலைவரிசைகளுக்கு மாறக்கூடாது."


"தரும நெறியில் வாழ்பவனுக்குத்தான் இனி பாதுகாப்பு உண்டு."
- அன்னையின் அருள்வாக்கு

“Only those who live by righteousness will be secure.”
– Mother Goddess Adhiparasakthi’s Oracle


"உங்கள் உள்ளத்தில் நல்ல எண்ணங்களே தோன்ற வேண்டும். நீங்கள் பேசுகிற வார்த்தைகளிலும் நல்லுணர்வே வெளிப்படவேண்டும். அத்துடன் உங்கள் ஆன்மாவிலும் நல்லெண்ணங்கள் புகுதல் வேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு


“Good thoughts should come to you. Your speech should have good feeling. Moreover good thought should enter your soul.” - Mother Goddess Adhiparasakthi’s Oracle

"ஈட்டி எட்டியவரை பாயும்; பணம் பாதாளம் வரை பாயும் என்று தானே இதுவரை கேட்டிருக்கிறீர்கள். பக்தி அதற்கு மேலும் பாயும் என்பதை உங்களுக்கு உணர்த்துவேன்." - அன்னையின் அருள்வாக்கு

“You have only heard that the spear will go as far it is thrown, and that money will reach the under-world. I shall make you understand that devotion will go even beyond that.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle




செவ்வாய், 28 ஜூலை, 2009

உதவுகிற மனப்பான்மை முதலில் வரவேண்டும்.அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

அன்னையின் அருள்வாக்கு:

தருமம் என்பது உன் கருமம்


தீர்க்கத் தான் என்று புரிந்து கொள்!

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மிகப் பாதை:

" நீ செல்கிற பாதை நல்லதாக இருந்தால் உன் பார்வையும் நல்லதாக இருக்கும். வாழ்க்கையில் நீ தேர்ந்தெடுக்கும் பாதை தீமையானது என்றால் உனக்கு ஆபத்துகளும் தொடரும்.

உன்னைச் சுற்றியிருப்பவர்கள் உன் காலைப் பிடிப்பது போல் காலை வாரிவிடுவார்கள். உன் கழுத்தைப் பிடிப்பது போல் நடித்து உன் கண்ணையே குத்துவார்கள்.

நீ ஆன்மிகப் பாதையினைத் தேர்ந்தெடுத்து வாழத் தொடங்கினால் அத்தகைய ஆபத்துக்கள் குறைவு."

ஆன்மிகம் என்ற பாதுகாப்பு:

" ஒரு வீட்டிற்குப் பாதுகாப்பு கருதி வாயிற்படியையும், கதவையும் அமைத்து கொள்கிறீர்கள். அதுபோல உங்கள் வாழ்க்கைக்குப் பாதுகாப்பாக ஆன்மிகத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே பிறர் துன்பத்தையும் தன துன்பமாக நினைத்து உதவுகிற மனப்பான்மை முதலில் வரவேண்டும்."

"அடிமேல் அடி அடித்தால் தான் அம்மியும் நகரும். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். அதனால் தான் உங்களை அடிமேல் அடி அடித்து உங்கள் உள்ளத்தில் உள்ள அழுக்கை நீங்கச் செய்கிறேன்." - அன்னையின் அருள்வாக்கு

“Continuous pressure makes the stone move, and a thorn is picked by another thorn. Hence I am raining blows on you to remove the impurity in your mind.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle


"அழிவுகள் வரக்காத்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் பொறாமை ஏற்படும். சொத்து, சுகம் எதுவும் உங்களுக்குத் துணை வராது. நீங்கள் செய்யும் தருமம் தான் துணை வரும்."

- அன்னையின் அருள்வாக்கு


“Animals are born. They grow. They procreate with the feeling of lust. Then they die. But man should not live like animals and die. He should lead a progressive life by involving himself in spirituality, by practicing self-control and performing charitable deeds.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle


"விலங்கினங்கள் பிறக்கின்றன். வளர்கின்றன். காம உணர்வோடு இனப்பெருக்கம் செய்கின்றன. இறந்து போகின்றன. மனிதன் விலங்குபோல் வாழ்ந்து மறையக்கூடாது. ஆன்மிகத்தில் ஈடுபட்டு, உணர்வை அடக்கிக் கட்டுப்படுத்தி, தருமம் செய்து வாழ்ந்து முன்னேறி வரவேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு


அன்னையின் அருள்வாக்கு:

ஈட்டி எட்டிய வரை பாயும், பணம் பாதாளம்


வரை பாயும், பக்தி அதற்கு மேலும் பாயும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

அகங்காரம் ஆபத்து:

" பறவைகளின் எச்சத்தினால் விழுந்த ஆழம் விதைகள் பூமியிலும் வளர்ந்து செடியாகின்றன. கோபுரத்தில் மீதும் விழுந்து செடியாகின்றன. கோபுரத்தில் அந்தச் செடி வளர்வதற்கு ஈரப்பசையும், மழையும் காரணமாகின்றன.

பூமியில் வளரும் செடியை விட நான் உயர்ந்தவன் என்று கோபுரத்தைச் செடி நினைக்கலாமா...?

ஆன்மிகத்துறைக்கு வந்துவிட்டதால் கிடைக்கிற மதிப்பு, மரியாதைகளை வைத்து ஒருவன் தான் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டதாக எண்ணிக் கொள்ளக் கூடாது.

கோபுரத்தில் ஒரு விரிசல் ஏற்படுவதைக் கண்டவுடனே அந்தச் செடி வேரோடு பறித்து எறியப்படுகிறது. அதுபோல ஆன்மிகத்தில் அகங்காரம் தலைக்கேரியவர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள்."

ஆன்மா ஒன்றுதான்:

"இன்றைய மனிதகுலத்தில் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு தெய்வத்தை வைத்து வணங்கி வருகிறது. என்றாலும் ஆன்மா என்பது ஒன்றுதான்."







ஞாயிறு, 26 ஜூலை, 2009

பணம் பணம் என்று அலையக்கூடாது. - அன்னையின் அருள்வாக்கு

பணம் பணம் என்று அலையக்கூடாது. பணம் பிணத்துக்குச் சமம். சேர்த்து வைத்த பணத்தைத் தான, தருமங்கள் போன்ற நியாயமான வழிகளில் செலவிட வேண்டும். இறுக்கிப் பிடித்துச் சேர்க்க நினைத்தால் அது உனக்குக் கடன்களாகவும் நோய்களாகவும் பெருகி உன்னையே அழித்துவிடும்." - அன்னையின் அருள்வாக்கு

“Do not go after material wealth. Money is equivalent to a corpse. Accumulated wealth should be spent in just deeds of charity and righteousness. If you think of accumulating money by being stingy, it will multiply into your debts and diseases and will lead to your destruction.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

உழைக்காமலே உயர்வு

"இன்று மக்களில் 99 சதவீதம் உழைக்காமலே சாப்பிட வேண்டும்; வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த மனப்பான்மை பெருகினால் எதிர் காலத்தில் எல்லாத் துறைகளிலும் பிரச்சனை ஏற்படும்." அன்னையின் அருள்வாக்கு

Atrocities will Result in Destruction

“99% of the world is infested with atrocities. Hence there is ruin. If a person is not serious in his utterings he might face destruction.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

உள்ளம் என்ற பாத்திரத்திற்குத் தக்கபடி

ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய குடத்தை எடுத்து வருபவன் அதில் தண்ணீர் எடுத்துக் கொள்கிறான். சிறிய குடத்தை எடுத்து வருபவன் அதற்குத் தக்கபடி தண்ணீர் முகர்ந்து செல்கிறான். மண் செப்பை எடுத்து வருபவன் அதற்குத் தக்கபடி தண்ணீர் முகர்ந்து செல்கிறான். எதையுமே எடுத்து வராதவன் கையாலாவது அள்ளிக் குடிக்கலாம் என்று அள்ளிக் குடிக்கிறான். உங்கள் உள்ளம் எனும் பாத்திரம் எப்படியோ அப்படியே அந்த அளவுக்குத் தக்கபடி உங்களுக்கு பலங்களும் கிடைக்கும். எனவே பொறாமை அழுக்கு ஆகியவற்றைத் தவிர்த்துக் கொண்டு வா!" - அன்னையின் அருள்வாக்கு

Ladder – Boat

“Ladder lifts up others. But never lifts itself up. Boat helps others to reach the bank. But it never reaches the bank on its own accord. Spirituality helps you to come up and makes you help others to come up. You can reach the bank and you can make others also to reach the bank.” - Mother Goddess Adhiparasakthi’s Oracle

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

தற்போது காலவெள்ளம் காமவெள்ளமாக

மாறி வருகிறது.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

அரசியலும் ஆன்மிகமும்:

" வெட்டு, குத்து, வேண்டுமென்றால் அரசியலுக்குப் போ! மனநிம்மதி வேண்டும், சுபிட்சம் வேண்டும், மழை வேண்டும் என்றால் ஆன்மிகத்திற்கு வா!"

கண் திருஷ்டிக்குள்ள சக்தி:

" ஒரு மனிதனின் கண் ஒளிக்கு ஒரு வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு."

படித்தவனும் - பாமரனும்:

" அடிமட்டத்தில் இருப்பவனுக்கும் ஆன்மிகம் உண்டு. அதிகம் படித்தவன் விளக்கொளியில் மயங்கி அழியும் விட்டில் பூச்சி போல அழிந்துபோவான்."

முயற்சிகளை நீ தான் மேற்கொள்ள வேண்டும்

"மகனே! குழந்தை பிறந்து அதற்குப் பசி ஏற்படுகிறது. பசியால் அழுகிறது. கை கால்களை உதறிக் கொள்கிறது. அதன் தேவைக்காகப் பசியை ஏற்படுத்தி வைத்திருக்கிறேன். அழுகிற சக்தியைக் கொடுத்திருக்கிறேன். அழுகிற குழந்தையைத் தூக்கி வைத்துத் தாய் என்ன செய்கிறாள்? தன் மார்பில் வைத்துக் கொள்கிறாள். பாலை உறிஞ்சிக் குடித்துக் கொள்ள வேண்டிய முயற்சி யாருடையது? அந்தக் குழந்தையினுடையதல்லவா? அது போல இங்கே சில வாய்ப்புகளை நான் உங்களுக்கு ஏற்படுத்தித்தான் கொடுக்க முடியும். மற்ற முயற்சிகளை நீ தான் மேற்கொள்ள வேண்டும். நீ தான் முயன்று உயரவேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு

செவ்வாய், 21 ஜூலை, 2009

ஆண்டாள் அருளிய திருப்பாவை


ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தில், ஆழ்வார்கள் உயர்ந்த ஸ்தானத்தை உடையவர்கள். அந்த ஆழ்வார்களின் கூட்டத்தில், பாண்டிய ராஜ சபையில் பர தத்துவம் ஸ்ரீமன் நாராயணனே என்று உலகு உய்ய நிர்ணயம் செய்து, பின் அந்த பரவாசுதேவனான கண்ணனுக்கே தம் அன்பால் கண்ணேறு கழித்த பெரியாழ்வார் மிக உயர்ந்தவர். அப்படிப்பட்ட பெரியாழ்வாரையும் விஞ்சி அந்த பரம்பொருளுக்கே வாழ்க்கைப்பட்ட ஆண்டாள், விஷ்ணு பக்தியின் சிகரமாக விளங்குகிறாள்.

ஆசார்ய வந்தனம்


லக்ஷ்மீ நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம் |
அச்மதாசார்யா பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||

யோநித்யமச்சுதபதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யமோஹதஸ்தத் இதராணி த்ருணாய மேனே |
அஸ்மத் குரோ: பகவதோஸ்ய தயைக சிந்தோ
ராமானுஜஸ்ய சரணௌ சரணம் பரபத்யே ||

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய கவிதார்கிக கேசரி |
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதாஹ்ருதி ||

ஆண்டாளின் தோற்றம்

ஸித்தானாம் சரதாம் கலாவபகமே வர்ஷே நளாக்யே ரவெள
யாதே கர்க்கடகம் விதாவுபசிதே ஷஷ்டேஹநி ஸ்ரீமதி |
நக்ஷத்ரேர்யமதைவதே க்ஷிதிபுவோ வாரே சதுர்த்யாம் திதெள
கோதா ப்ராதுரபூதசிந்த்யமஹிமா ஸ்ரீவிஷ்ணு சித்தாத்மஜா ||

கலி பிறந்து தொண்ணூற்றேழு ஆண்டுகளுக்கு பிறகு (கடபயாதி சங்க்யை படி ஸித்த என்ற வார்த்தையை தொண்ணுற்று ஏழு என்று கொள்வர்) ஒரு நள வருஷத்தில், சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும்போது, சுக்ல பக்ஷ சதுர்த்தியில், ஆடிமாதம் ஆறாம் தேதி செவ்வாய் கிழமையன்று, அர்யமா என்னும் தேவனுக்குரிய பூர நக்ஷத்திரம் கூடிய சுப தினத்தில், ஸ்ரீவிஷ்ணு சித்தருடைய பெண்ணாக கோதை அவதரித்தாள்!
ஆண்டாள் ஆழ்வார்களைக்காட்டிலும் உயர்ந்தவள் என்று சொல்வார்கள் - ஏனெனில் பக்தியில் ஆழ்வார்களே ஆண்டாளின் வழிமுறையை கைக்கொண்டுதான் பரம்பொருளை அடைந்தார்கள் என்று பூர்வாசார்யர்கள் அருளியிருக்கிறார்கள். ஆண்டாள் பெண்ணானதால் அரங்கனை எளிதாக காதலிக்க முடிந்தது - தன் பக்தியை ப்ரணயமாய், விரகமாய் வெளிப்படுத்த முடிந்தது - இதே வழியைத்தான் ஆழ்வார்களும், நாயகி பாவத்தில் கடைபிடிக்க முயற்சித்தார்கள் - நம்மாழ்வார் பக்தியால் தம்மை பராங்குச நாயகியாக்கிக் கொண்டார் - திருமங்கை மன்னன் தம்மை பரகால நாயகி ஆக்கிக் கொண்டார்.

மேற்சொன்ன கருத்தை ஸ்வாமி தேசிகன் இந்த கோதாஸ்துதி ஸ்லோகத்தில் சொல்கிறார்:

போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே!
பக்திம் நிஜாம் ப்ரணய பாவனயா க்ருணந்து ||
உச்சாவசைர்விரஹ ஸங்கமஜைருதந்தை
ஸ்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ்தவதீயா ||

ஹே கோதாதேவி! உன்னுடைய ப்ரியதமனான-காதலனான கண்ணனிடம் பக்தியை ப்ரணய பாவனையாக - காதலாக வெளிப்படுத்தினாய். பிரிந்தால் விரஹமாகவும், பிணைந்தால் இன்பமாகவும் பல்வேறு பாவனைகளை வெளிப்படுத்தி நீ செய்த பக்தியைப்போல் உயர்ந்தது வேறில்லாமையால், ஆண்களான ஆழ்வார் ஆசார்யர்களும் தம்மை பெண்ணாகக்கருதி உன் வழிமுறையையே கைக்கொண்டார்கள்”. இதிலிருந்து பரம்பொருளை காதல் செய்து அவனையே மணந்த ஆண்டாளின் வழிமுறையே சிறந்தது என்பது கருத்து.

ஆண்டாள் அருளிய திருப்பாவை

அன்னவயற் புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு (ப்)
பன்னு திருப்பாவை(ப்) பல்பதியம்
இன்னிசையால் பாடிகொடுதாள் நற்பாமாலை
பூமாலை சூடி(க்) கொடுத்தாளை(ச்) சொல்லு

சூடி(க்) கொடுத்த சுடர்(க்) கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.

பாசுரம்-1.மார்கழி(த்) திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட(ப்) போதுவீர் போதுமினோ நேரிழைஈர்
சீர்மல்கும் ஆய்பாடி(ச்) செல்வ(ச்) சிறுமீர்காள்
கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
எரார்ந்த கன்னி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழ்(ப்) படிந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்-2.வையத்து வழ்வீர்காள்!நாமும் நம் பாவைக்கு(ச்)
செய்யும் கிரிசைகள் கேளீரோ,பார்கடலுள்
பைய(த்) துயின்ற பரமனடி பாடி
நெய்யுன்னோம் பாலுன்னோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை(ச்) சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனயும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்.

பாசுரம்-3
.ஓங்கி உலகளந்த! உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்கு(ச்) சாற்றி நீரடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கும் பெரும் சென் நெல் ஊடு கயலுகள(ப்)
பூங்குவளை(ப்) போதில் பொரிவண்டு கண்படுப்ப(த்)
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வல்லல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

பாசுரம்-4.ஆழி மழை(க்)கண்ணா! ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து(ப்)
பாழிய் அம் தோலுடை(ப்) பத்மனாபன் கையில்
ஆழி போல் மின்னி,வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்கலும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

பாசுரம்-5
.மாயனை மன்னுவட மதுரை மைந்தனை(த்)
தூயப் பெருனீர் யமுனை(த்) துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை(த்)
தாயை(க்) குடல் விலக்கஞ் செய்த தாமோதரனை(த்)
தூயமாய் வந்து நாம் தூமலர் தூவி(த்) தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க(ப்)
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பாசுரம்-6.புள்ளும் சிலம்பின காண் புல்லரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்!பேய் முலை நஞ்சுண்டு
கள்ள(ச்) சகடம் கலக் கழிய(க்) காலோச்சி
வெல்லத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்து(க்) கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெல்ல எழுந்து அரி யென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பாசுரம்-7.கீசு கீசென்று ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலயோ ? பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்!திற ஏல் ஓர் எம்பாவாய்

பாசுரம்-8.கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவை எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்

பாசுரம்-9.தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயில் அனை மேல் கண் வளரும்
மாமான் மகளே!மணிக்கதவம் தாழ்திறவாய்!
மாமீர் ! அவளை எழுப்பீரோ?உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்

பாசுரம்-10.நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணண் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்றும் முனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திர ஏல் ஓர் எம்பாவாய்

பாசுரம்-11.கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

பாசுரம்-12.
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தானெ ழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தே லோரெம்பாவாய்!

பாசுரம்-13.
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்!

பாசுரம்-14.
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!

பாசுரம்-15.

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலொ ரெம்பாவாய்!

பாசுரம்-16.

நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ!
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!

பாசுரம்-17.

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்!
அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!

பாசுரம்-18.

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!
கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

பாசுரம்-19.

குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!
மைத்தடங் கண்ணினாய்! நீ உன்மணாளனை
எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிறிவாற்ற கில்லாயேல்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!

பாசுரம்-20.
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்!
செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலேழாய்!
உக்கமுந் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!

பாசுரம்-21.
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுராய்!
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!

பாசுரம்-22.
அங்கண் மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்!
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ!
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல்சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!

பாசுரம்-23.
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!

பாசுரம்-24.
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்

பாசுரம்-25.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

பாசுரம்-26.
மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன
பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,
சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே, விதானமே,
ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.

பாசுரம்-27.
கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாக,
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு(*)
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

பாசுரம்-28.
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்
பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,
இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.


பாசுரம்-29.

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

பாசுரம்-30.
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கற்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!
மருவாறும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்கோதை மலர்பாதங்கள் வாழியே!

ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆசார்யர் திருவடிகளே சரணம்
ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீமதே நாராயணாய நம:
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து:
Get this widget | Track details | eSnips Social DNA


இந்த பாராயணத்தை wav வடிவில்
தரவிறக்க
இங்கே சொடுக்கவும்.
http://www.ziddu.com/download/5765696/thirupavai.wav.html

ஞாயிறு, 19 ஜூலை, 2009

ஆன்மிகத்தில் ஆழமான ஈடுபாடு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

அழிவு எந்த ரூபத்திலும் வரும் ஆன்மிகத்தில் ஈடுபாடு


வைத்துக் கொண்டு தொண்டாற்றி வந்தால் தப்பிக்கலாம்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆவிகளும்: பூதங்களும்:

"உலகத்தில் பூதகணங்கள், ஆவிகள் எல்லாம் உண்டு."

ஆன்மிகத்தில் ஆழமான ஈடுபாடு:

"ஒரு செடி வளர முதலில் விதை வேண்டும். அந்த விதையை ஊன்ற மனம் வேண்டும். அந்த விதையை ஆழமாக ஊன்ற வேண்டும். அதனை ஊன்றுவதற்கு ஏற்ற பூமி வேண்டும். அது நன்கு வளர்வதற்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதுபோல், ஆன்மிகத்திலும் நீங்கள் ஆழமான ஈடுபாடு வைத்துக் கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு ஆழமான ஈடுபாடு இருக்கிறதோ அந்த அளவிற்குத் தக்கபடி பயன் கிடைக்கும்."

ஆன்மிக போதை:

" ஒரு குடிகாரன் போதையில் இருக்கும் போது அடித்தால் அவனுக்கு எந்த வலியும் தெரிவதில்லை. போதை தெளிந்தவுடன் வலி தெரிகிறது. அந்த வலியும் அவனது உடலுக்கு தவிர ஆன்மாவுக்கு அல்ல. ஆன்மிக போதை ஏற்பட்டு விட்டால் அது என்றும் தெளியாது. அந்த போதை தான் மேலானது உயர்வானது."

சனி, 18 ஜூலை, 2009

பேரழிவுகள் ஏன் ஏற்படுகின்றன?அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:


நீங்கள் செய்யும் பாவமும், தெய்வ நிந்தனையும்

தான் கோளங்களை வெடிக்கச் செய்கின்றன..


நாத்திக பேய்களை ஓட்டும் மந்திரம் தான்ஓம் சக்தி


அடுத்தவரின் மதத்தையும் மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும்


நாத்திகமே மனித அழிவுப் பாதைக்கு முதற்படி என்பதை உணர்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மாவிற்கு ஓய்வும் அமைதியும்:


"கடலில் எழும்பும் அலைகள் ஓய்வதில்லை. உள்ளத்தில் எழும்பும் ஆசை அலைகளும் ஓய்வதில்லை. நடுக்கடலில் கடல் அலைகள் ஓய்ந்திருக்கும். அதுபோலவே மனித மனத்தில் உள்ள ஆசாபாசங்கள் என்பவற்றை அடக்கினால் மனம் அமைதியடையும். அப்போது ஆன்மாவிற்கு ஓய்வு உண்டு.

உங்கள் ஐம்புலங்களும் ஒன்றி உள்ளம் குளிரும் போது ஆன்மாவும் குளிர்ந்து அமைதி அடைகிறது."


ஆசைகள் இருக்கிற வரை...


"எரிகிற கொள்ளிக்கட்டையைத் தண்ணீரால் அணைத்த பிறகும் சற்றுநேரத்திற்குச் சூடு இருந்தபடியே இருக்கும். நீங்கள் என்னதான் ஆன்மிகத்தில் ஈடுபட்டிருந்தாலும் உள்ளத்தில் ஆசைகள் இருக்கிற வரை துன்பமும் தொடர்ந்து இருக்கும்."


உங்கள் ஆன்ம உணர்வு:


"ஒரு புத்தம் புதுக்கருவியை பேட்டரியால் இயக்குகிறபோது முதலில் நன்றாக வேலை செய்யும் அந்த பேட்டரி தேயத்தேய அந்தக் கருவியும் முன்போல இயங்க மறுக்கும்.

உங்கள் உள்ளே இருக்கிற இதயம் என்ற பேட்டரியைத் தேயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பார்த்துக் கொண்டால் தான் உங்கள் ஆன்மாவும் சுத்தமாக இருக்கும்.

உங்கள் மனத்தில் உள்ள சுத்தத்தைப் பொறுத்தே உங்கள் ஆன்மா சுத்தமடையும்."


எல்லோருமே ஆன்மிகவாதியாக மாறவேண்டும்:


"ஊருக்கு ஒரு ஆன்மிகவாதியும், வீட்டிற்கு ஒரு ஆன்மிகவாதியும் உருவானால் மட்டும் போதாது. எல்லோருமே ஆன்மிகவாதியாக மாறினால் தான் நாட்டில் அமைதி கிடைக்கும். இரண்டு மனங்களும் ஒன்றுபட்டால் தான் அமைதி கிடைக்கும்."

ஆன்மிகத்தில் அவசரம் கூடாது:


"ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றி, பூ பூத்துக் காய் காய்த்து, பழம், பழுக்கும் வரை காத்திருக்கிறீர்கள். அதுபோலவே ஆன்மிக உலகிலும் காத்திருக்கப் பழக வேண்டும். ஆன்மிகத்தில் அவசரம் கூடாது."

"உள்ளத்தெளிவுவோடு ஆன்மிகப் பணிகள் செய்ய உங்களுக்கு வாய்ப்பளிக்கிறேன். வேலைக்காரி ஒருத்தி ஏதோ கடமைக்காகப் பணி செய்து பாத்திரம் தேய்த்தால் பாத்திரமும் சுத்தமாவதில்லை. உள்ளத்திற்கும் தெளிவு ஏற்படுவதில்லை. அன்போடும், உள்ளத் தூய்மையோடும் அவள் பணி செய்யும்போது அவளுக்கு அமைதியும், உள்ளத்தெளிவும் ஏற்படும். அந்த தெளிவு உள்ளவர்களுக்கு ஆன்ம முன்னேற்றத்திற்கு வாய்ப்பு உண்டு." - அன்னையின் அருள்வாக்கு

“I give you chance do spiritual duties with a clear conscience. If the housemaid washes the vessels for the sake of doing her duty, the vessel remain unclean. Her mind does not gain clarity. If she does her work out of love and with a clear conscience she achieves peace and clarity of mind. Since you work for the welfare of other people your mind becomes clear in its perspective. If your mind is clear then you may have a chance to progress in spirituality. “– Mother Goddess Adhiparasakthi’s Oracle


"பறவைகளின் எச்சத்தினால் விழுந்த ஆலம் விதைகள் பூமியிலும் வளர்ந்து
செடியாகின்றன. கோபுரத்தின் மீதும் விழுந்து செடியாகின்றன. கோபுரத்தில் அந்தச் செடி வளர்வதற்கு ஈரப்பசையும், மழையும் காரணமாகின்றன. பூமியில் வளரும் செடியை விட நான் உயர்ந்தவன் என்று கோபுரத்துச் செடி நினைக்கலாமா...?

ஆன்மிகத்துறைக்கு வந்துவிட்டதால் கிடைக்கிற மதிப்பு, மரியாதைகளை
வைத்து ஒருவன் தான் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டதாக எண்ணிக் கொள்ளக் கூடாது.

கோபுரத்தில் ஒரு விரிசல் ஏற்படுவதைக் கண்டவுடனே அந்தச் செடி வேரோடு
பறித்து எறியப்படுக்கிறது. அதுபோல ஆன்மிகத்தில் அகங்காரம் தலைக்கேறியவர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள்." - அன்னையின் அருள்வாக்கு

“The banyan seeds that have fallen on the earth from the excreta of the birds grow into plants. The plants grow on the tower because of moisture and rain.

Can the plant growing on the tower think that it is superior to the plant growing on the earth?

One should not think that he has reached a higher status just because of the respect and honor that he gains as he is in the field of spirituality.

That plant gets uprooted and thrown out when a crack is identified on the tower. Similarly arrogant people are thrown out from the filed of spirituality.”- Mother Goddess Adhiparasakthi’s Oracle

"வெறும் தத்துவம் பேசினால் மட்டும் போதாது. தத்துவத்தில் தாதுப்பொருள் (உரம்) இருக்க வேண்டும். தத்துவத்தைக் காட்டிலும் சத்தியம் பெரிது. சத்தியத்தைப் பின்பற்றி வாழாமல் தத்துவம் பேசி, ஆன்மிகத்தில் முன்னேற முடியாது. பக்தி மிகுந்தவனுக்குத் தத்துவம் தேவையில்லை." - அன்னையின் அருள்வாக்கு


“Empty philosophical speech alone is not enough. Philosophy should have manure (matter). More than philosophy, truth is important. You cannot progress in spirituality by talking philosophy without following truth. A person who is more devoted does not require philosophy.” - Mother Goddess Adhiparasakthi's Oracle


எண்ணங்களும்: பிரதிபலிப்பும்


"காற்றலைகள் உயர்வு தாழ்விற்கு ஏற்றபடி எதிரோலிக்கும், அவை வெற்றிடத்தில் வேலை செய்யாது.

மலையைப் பார்த்து ஓ! என்று சப்தம் எழுப்பினால் அந்தச் சப்தமே எதிரொலிக்கும்.

ஒருவனுடைய புகைப்படம் அவனை அப்படியே பிரதிபலிக்கிறது. அதுபோலவே உங்கள் ஆன்மாவில் பதியும் எண்ணங்களே உங்களிடம் பிரதிபலிக்கின்றன.

ஒவ்வொரு ஆன்மாவிற்கும் ஒவ்வொரு நிலையுண்டு, பணத்தாலும் சொத்துக்களாலும் உங்கள் ஆன்மா பக்குவப்பட்டு விடாது. ஆன்மிகம் ஒன்றால் தான் ஆன்மாவைப் பக்குவப்படுத்த முடியும்.

ஆன்மாவினால் தான் இயற்கையை வெல்ல முடியும். அனைத்திற்கும் அழிவுண்டு. ஆன்மாவிற்கு அழிவில்லை."


பணத்திற்கும், ஞானத்துக்கும் தூரம் அதிகம்:


"பணத்தால் பிறரை வேலை வாங்கலாம். அந்த பணத்தை கொண்டு அழிவையும் தேடிக்கொள்ளலாம். பணத்தால் உண்மை அறிவை வாங்க முடியாது."











Blog Widget by LinkWithin