புதன், 8 ஜூலை, 2009

உயிர் இருப்பது எங்கே?

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

நீங்கள் செய்யும் தொண்டுகளை வைத்து உங்கள்

பேரன், பேத்திகளுக்கு என் அருளைக் கொடுப்பேன்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

அநாகரிகம்:

" அநாகரிகம் அழிவிற்கு வழி வகுக்கும். அநாகரிகத்தை ஆன்மிகம் வெல்லும்."

உயிர் இருப்பது எங்கே:

" சக்த்திக்கும் சக்தி தேவை. அந்தத் சக்தி எந்த ரூபம் என்று உங்கள் யாருக்கும் தெரியாது. சாகும்போது கைகால் இழுக்கிறது. எல்லா உறுப்புகளும் அசைகின்றன. ஒரே ஒரு உறுப்பு மட்டும் அசையாது. அந்த இடத்தில் தான் உயிர் இருக்கிறது."

ஆன்ம சக்தி:

" ஆன்மிகத்தின் சக்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆன்மா தான் சக்தியாகிறது. ஒரு பொருளுக்கு உருவத்தைக் கொடுக்கும் தன்மையும் அப்பொருளை அழிக்கும் தன்மையும் அந்தச் சக்திக்கு உண்டு!"


“The burning wick in a lamp will flicker even if it is kept in a place away from the breeze. Similarly the human body will be smitten by some disease or the other!” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

"காற்றுச் சலனமில்லாத இடத்தில் விளக்கில் எண்ணெய் ஊற்றித் திரியைஏற்றிக் கொளுத்தினாலும், தீபத்தின் ஒளி அசைந்தாடிக் கொண்டு தான்இருக்கும். அதுபோல மனித உடம்பு என்று ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தபிறகு உடம்பிற்கு நோய் வரத்தன் செய்யும்." - அன்னையின் அருள்வாக்கு

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

பணத்தால் பாவங்களும், சொத்து சேர்ப்பதனால்

கவலைகளும்உண்டாகும்.

தொண்டினால் தான் வளர்ச்சி உண்டாகும்.

ஆன்மிகம்:

நிலையான முன்னேற்றம்:

"வாழ்கையில் நிலையான் முன்னேற்றத்திற்கு வழி ஆன்மிகத்தில் தான் உண்டு. வறட்சியையும், தாங்கிக் கொண்டு வளர்கிற பயிர்கள் உண்டு.

அதுபோல் வறுமையும், ஏழ்மையும் வாட்டினாலும் தாங்கிக் கொண்டு

ஆன்ம முன்னேற்றம் பெறவேண்டும்."

நம்மால் பிறருக்கு என்ன நன்மை:

"உள்ளம் வளர வேண்டும். பலருக்கும் அது பயன்பட வேண்டும்.

மற்றவர்களால் நமக்கு என்ன நன்மை என்று பாராமல்,

நம்மால் பிறருக்கு என்ன நன்மை என்று பார்த்தே செய்யல்பட வேண்டும்."

ஆன்மாவிற்காகவே உடம்பு:

"ஆன்மாவிற்காக உடம்பே தவிர, உடம்புக்காக ஆன்ம அல்ல!
தருமம்
, தொண்டு, பக்தியை வளர்த்துக் கொண்டு ஆன்ம வளர்ச்சி பெற வேண்டும். மனம் போன போக்கில் வாழக்கூடாது.
பணமே குறியாகவும் வாழக்கூடாது."

“You need not chant mantras for others to see you. It is good for you to meditate in a dark room.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle


மற்றவர்களெல்லாம் பார்க்க வேண்டும் என்பதற்காக மந்திரங்களைப் படிப்பதைக் காட்டிலும், இருட்டறையில் இருந்து கொண்டு தியானம் செய்வது சிறப்பு." - அன்னையின் அருள்வாக்கு

2 கருத்துகள்:

  1. நல்ல பதிவு. இது போல நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நன்றிகள் நண்பர் கும்மாச்சி
    தங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.
    கார்த்திகேயன்
    அமீரகம்

    பதிலளிநீக்கு

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin