செவ்வாய், 28 ஜூலை, 2009

உதவுகிற மனப்பான்மை முதலில் வரவேண்டும்.அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

அன்னையின் அருள்வாக்கு:

தருமம் என்பது உன் கருமம்


தீர்க்கத் தான் என்று புரிந்து கொள்!

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மிகப் பாதை:

" நீ செல்கிற பாதை நல்லதாக இருந்தால் உன் பார்வையும் நல்லதாக இருக்கும். வாழ்க்கையில் நீ தேர்ந்தெடுக்கும் பாதை தீமையானது என்றால் உனக்கு ஆபத்துகளும் தொடரும்.

உன்னைச் சுற்றியிருப்பவர்கள் உன் காலைப் பிடிப்பது போல் காலை வாரிவிடுவார்கள். உன் கழுத்தைப் பிடிப்பது போல் நடித்து உன் கண்ணையே குத்துவார்கள்.

நீ ஆன்மிகப் பாதையினைத் தேர்ந்தெடுத்து வாழத் தொடங்கினால் அத்தகைய ஆபத்துக்கள் குறைவு."

ஆன்மிகம் என்ற பாதுகாப்பு:

" ஒரு வீட்டிற்குப் பாதுகாப்பு கருதி வாயிற்படியையும், கதவையும் அமைத்து கொள்கிறீர்கள். அதுபோல உங்கள் வாழ்க்கைக்குப் பாதுகாப்பாக ஆன்மிகத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே பிறர் துன்பத்தையும் தன துன்பமாக நினைத்து உதவுகிற மனப்பான்மை முதலில் வரவேண்டும்."

"அடிமேல் அடி அடித்தால் தான் அம்மியும் நகரும். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். அதனால் தான் உங்களை அடிமேல் அடி அடித்து உங்கள் உள்ளத்தில் உள்ள அழுக்கை நீங்கச் செய்கிறேன்." - அன்னையின் அருள்வாக்கு

“Continuous pressure makes the stone move, and a thorn is picked by another thorn. Hence I am raining blows on you to remove the impurity in your mind.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle


"அழிவுகள் வரக்காத்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் பொறாமை ஏற்படும். சொத்து, சுகம் எதுவும் உங்களுக்குத் துணை வராது. நீங்கள் செய்யும் தருமம் தான் துணை வரும்."

- அன்னையின் அருள்வாக்கு


“Animals are born. They grow. They procreate with the feeling of lust. Then they die. But man should not live like animals and die. He should lead a progressive life by involving himself in spirituality, by practicing self-control and performing charitable deeds.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle


"விலங்கினங்கள் பிறக்கின்றன். வளர்கின்றன். காம உணர்வோடு இனப்பெருக்கம் செய்கின்றன. இறந்து போகின்றன. மனிதன் விலங்குபோல் வாழ்ந்து மறையக்கூடாது. ஆன்மிகத்தில் ஈடுபட்டு, உணர்வை அடக்கிக் கட்டுப்படுத்தி, தருமம் செய்து வாழ்ந்து முன்னேறி வரவேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு


அன்னையின் அருள்வாக்கு:

ஈட்டி எட்டிய வரை பாயும், பணம் பாதாளம்


வரை பாயும், பக்தி அதற்கு மேலும் பாயும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

அகங்காரம் ஆபத்து:

" பறவைகளின் எச்சத்தினால் விழுந்த ஆழம் விதைகள் பூமியிலும் வளர்ந்து செடியாகின்றன. கோபுரத்தில் மீதும் விழுந்து செடியாகின்றன. கோபுரத்தில் அந்தச் செடி வளர்வதற்கு ஈரப்பசையும், மழையும் காரணமாகின்றன.

பூமியில் வளரும் செடியை விட நான் உயர்ந்தவன் என்று கோபுரத்தைச் செடி நினைக்கலாமா...?

ஆன்மிகத்துறைக்கு வந்துவிட்டதால் கிடைக்கிற மதிப்பு, மரியாதைகளை வைத்து ஒருவன் தான் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டதாக எண்ணிக் கொள்ளக் கூடாது.

கோபுரத்தில் ஒரு விரிசல் ஏற்படுவதைக் கண்டவுடனே அந்தச் செடி வேரோடு பறித்து எறியப்படுகிறது. அதுபோல ஆன்மிகத்தில் அகங்காரம் தலைக்கேரியவர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள்."

ஆன்மா ஒன்றுதான்:

"இன்றைய மனிதகுலத்தில் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு தெய்வத்தை வைத்து வணங்கி வருகிறது. என்றாலும் ஆன்மா என்பது ஒன்றுதான்."







2 கருத்துகள்:

  1. இதற்கு ஓட்டு கருத்து எதுவும் தேவையில்லை. காரணம் கோவிலுக்குள் சென்று குருக்கள் குறைவான திருநீறு கொடுத்தார் என்று சாமியுடன் கோவித்துக்கொண்டு வெளியே வருபவன் எப்படி ஞானத்தை அடைய முடியும்? அது போல் இந்த இடுகையின் உள்ளே வந்து உள் வாங்கியவன் கட உள் என்று உணராதவன். அப்படி என்றால் உணராதவன் முழுமையாக உள் வாங்காதவன். உங்கள் வாழ்க்கை விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டு கலந்த சிறப்பு. உங்கள் வழித்தோன்றலுக்கான சிறுசேமிப்பு இது. தலைமுறைக்குச் சேரும். சந்தேகம் என்பதே வேண்டாம். புண்ணியம் செய்து விட்டுப் போன பல புனித ஆத்மாக்களால் தானே நீங்களும் நானும் 3000 வருடங்களைப் பார்த்தும் இன்று வரையிலும் தேடல் உடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. புனித ஆத்மாக்களால் தானே நீங்களும் நானும் 3000 வருடங்களைப் பார்த்தும் இன்று வரையிலும் தேடல் உடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.//

    ஆகா,அற்புதமான கருத்து ஜோதிஜி அவர்களே.
    இதை நான் எண்ணி எண்ணி வியந்துள்ளேன்.
    என் மனைவியின் ஊர் கோனாப்பட்டு, அதை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட எல்லா செட்டி நாடு கிராமங்களிலும்
    மிகப்பெரிய சிவன் கோவிலும்,அம்மன் கோவிலும் ஊருணியும் கண்டிப்பாக இருக்கும்,

    அந்த தெய்வ சிந்தனை 300 வருடங்களுக்கு முன்னர் அந்த வணிக குலத்தோருக்கு தோன்றியதே, திரைகடல் ஓடி சேர்த்த திரவியத்தை எப்படி இறைவனுக்கு கோவிலாக எழுப்பியுள்ளனர் என நினைத்து வியந்துள்ளேன்.
    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin