வியாழன், 9 ஜூலை, 2009

அநீதி அழிய ஆன்மிகமும் தருமமும் தான் தீர்வு:

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

"தொலைவில் உள்ள கானல் நீரைக்கண்டு உண்மையான நீர் என்று ஓடி ஏமாறுகிறாய்.

சூரிய ஒளியில் பிரகாசிக்கும் ஒரு கண்ணாடிக் கல்லைப் பார்த்து வைரம் என்று

நம்பி ஏமாறுகிறாய்

மாயை காரணமாக என்னை விட்டுவிட்டு வேறிடங்களுக்குச் சென்று ஏமாறுகிறாய்.

வெறும் தோற்றத்தைக் கண்டு நம்பி ஏமாறாமல் என்னையே பற்றிக் கொண்டிருப்பவன்

மாயையை வெல்வான்.
பொய்த் தோற்றம் கண்டு ஏமாறமாட்டான். உண்மையான

வைரத்தை அடைவான்


“When man thinks of bad ideas, disaster follows it.”- Mother Goddess Adhiparasakthi’s ஓரச்லே

உலகம் சோம்பேறி ஆவதற்கு அரசியலே காரணம்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து: ஆன்மிகம்:

ஆன்மிகமும் தருமமும் தான் தீர்வு:

"ஒருபக்கம் மனிதன்; ஒருபக்கம் கொலை; ஒருபக்கம் பசி; ஒருபக்கம் செழுமை; ஒருபக்கம் காற்று; ஒருபக்கம் அழிவு; ஒருபக்கம் வெடி; ஒருபக்கம் கூட்டம்; ஒருபக்கம் குழப்பம்; ஒருபக்கம் ஆன்மா; ஒருபக்கம் அமைதி!

இவையெல்லாம் ஏன்? என்ற வினாவைக் கேட்டுக்கொள்ள வேண்டும். இவற்றுக்குத் தீர்வு என்ன? என்று சிந்திக்கவேண்டும்.

ஆன்மிகமும், வழிபாடும், தருமங்களும் தேவை என்பது தான் விடை!

ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு பொருள் கொடுத்தால் தான் அன்பும் கிடைக்கும். அந்த அன்பு பெருகினால் தான் அமைதி நிலவும். ஆன்மிகத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வரவேண்டும்."

ஆன்மிகம் எதற்கு?

"பிச்சை எடுப்பவன் ஒருபக்கம்; பிக்பாகெட் அடிப்பவன் ஒருபக்கம்; காவல்துறை ஒருபக்கம்; கொலை, கொள்ளை ஒருபக்கம். இவை அனைத்தும் பெருகிக் கொண்டே போனால் என்ன ஆகும்? அவ்வாறு ஆகாமல் தடுத்து நிறுத்தவே ஆன்மிகம்!"


1 கருத்து:

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin