திங்கள், 13 ஜூலை, 2009

செய்த பாவச்செயல்களுக்கு மன்னிப்பு

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:


பௌர்ணமி தினத்தில் குருவிற்கு பாதபூசை செய்து தான்


செய்த பாவச்செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பது நல்லது

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மிகம் தான் பாதுகாப்பு:

"எந்த அரசும் எல்லோருக்கும் சேர்த்து எந்த நன்மையையும், பாதுகாப்பையும் அளித்துவிட முடியாது. உனக்கு நீதான் பாதுகாப்பு, தீய சக்திகள் பெருகிவிட்டன. தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் காலமும் நெருங்கிவிட்டது.

பத்துபேர் நல்லவனாக இருந்தால் நூறுபேர் கெட்டவனாக இருக்கிறார்கள். அந்த நூறுபேர் ஐந்நூறு பேரைக் கெட்டவர்களாக மாற்றுகிறார்கள். அந்த நூறுபேரை மாற்ற ஆன்மிகம் தேவைப்படுகிறது.

ஒரு கதிர் மட்டும் மூட்டையாவதில்லை. பல கதிர்கள் சேர்ந்தால் தான் மூட்டையாக முடியும். அதுபோல் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக ஆன்மிகப் பணிகளைச் செய்ய வேண்டும்."

துன்ப அனுபவங்களால் பக்குவம் ஏற்படுகிறது:

"விளையாட்டுக் குழந்தைக்குச் சோறூட்ட முயன்றால் தொடக்கத்தில் உன்ன மறுக்கிறது. பாட்டுப்பாடி சிரிக்க வைத்து விளையாட விட்டு அதற்கும் ஒரு சோர்வு ஏற்படுகிற நேரத்தில் ஊட்டினால் உணவை ஏற்றுக்கொள்கிறது. அதுபோல் இன்பம், சந்தோஷம் என்றெல்லாம் வருகிறபொழுது சில உண்மைகள் புரிவதில்லை. துன்பம் கஷ்டம் என்ற அனுபவங்கள் கிடைக்கிற பொழுதுதான் சில உண்மைகளை உணர்கிற பக்குவமே வருகிறது. துன்பம் ஏற்பட ஏற்படத்தான் ஆன்மா பக்குவப்படுகிறது. துன்பமும் ஓர் அனுபவமே. அந்த அனுபவத்தையும் ஒவ்வொருவனும் பெறவேண்டும்.."



“Do not deceive yourself thinking that I am ignorant! My blessings will always be with your down the ages. Do not lose yourself for the sake of the three-minute joy” - Mother Goddess Adhiparasakti’s Oracle


"நான் அறியமாட்டேன் என்று உன்னையே நீ ஏமாற்றிக் கொள்ளாதே! என் அருள் உனக்குக் காலம் காலமாக இருக்க வேண்டும். ஒரு மூன்று நிமிட சந்தோஷத்திற்காக உன்னை இழந்துவிடாதே!" - அன்னையின் அருள்வாக்கு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin