omsakthi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
omsakthi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

நீ ஒரு விளையாட்டுப் பொருள்:அன்னையின் அருள்வாக்கு:

அன்புக்குரிய சக்திகளுக்கு,
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
வினைகளை களைபவனே !
நலங்களை தருபவனே - விநாயகனே
என வணங்குவோம், வளம்பெறுவோம் !

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

ஆன்மிகத்தை உலகமே எதிர்க்கும்.

அது தான் கலியுகத்தின் இயல்பு.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆடையில்லாதவன் அரைமனிதனா?

"ஆடையில்லாதவன் அரை மனிதன் என்பார்கள். ஆடையில்லாதவன் தான் முழு மனிதன் !"

ஆன்மா உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்:

"ஆடி - ஓடி - பாடிக் கடைசியில் தெய்வத்தை அடைந்து சிலை அழகைப் பார்த்து, ஆடை அணிகலன்கள் பூட்டி மகிழ்ந்து,கற்பூரம் ஏற்றித் தேங்காய் உடைத்தால் மட்டும் போதாது. உள்ளத்தை உடைத்து, ஆன்மா உடையாமல் பாத்துக் கொள்ள வேண்டும்."

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

மிருகமெல்லாம் முன்னேறி மனிதநிலைக்கு வருகின்றன.

மனிதனோ முன்னேறிப் போகாமல் மிருகமாக மாறி வருகிறான்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

நீ ஒரு விளையாட்டுப் பொருள்:

"இந்த உலக அரங்கில் நீ ஒரு விளையாட்டுப் பொருள் என்பதை மறந்துவிடக் கூடாது."

புகழாசை கூடாது:

"ஆன்மிகத்தில் இருப்பவன் தன்னைப் புகழவேண்டும் என்பதற்காக எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது. இயற்கை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றித் தன் கடமையைச் செய்கிறது. அதுபோலவே ஓர் ஆன்மிகவாதியும் எந்த ஒரு எதிபார்ப்பும் இன்றி ஆன்மிகப் பனி செய்யவேண்டும்."

ஆராய்ச்சி தேவையற்றது:

"ஆன்மிகத்திற்கு வந்துவிட்ட பிறகு மனம் திருந்தி வாழ்வதற்கே முயலவேண்டும். அதை விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆராய்ச்சி செய்வது தேவையற்றது. அதனால் உனக்குக் காலம் தான் வீணாகும்."



செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

ஆலமரமும் - தருமமும் -அன்னையின் அருள்வாக்கு



அம்மாவின் அருள்வாக்கு - பன்றி காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு:


சக்தி ஒருவர் அருள்திரு அம்மாவிடம் பாத பூஜை செய்து பன்றிக் காய்ச்சல்வராமல் பாதுகாத்து கொள்ள அறிவுரை கேட்கப்பட்டபோது, அம்மா கூறிய நான்குஅறிவுரைகள் பின் வருமாறு:

ஐஸ்கிரீம் மற்றும் குளிர் சாதன பானங்களை தவிர்க்க வேண்டும்.

புது மண் சட்டியில் வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை மரத்தின் வேரையும் போட்டு, அதனுடன் காய்ச்சி ஆற வைத்த குடி தண்ணீரை ஊற்றி வைக்கவும். இந்த தண்ணீரை தினமும் பருகி வர வேண்டும்.

அசைவ உணவுகளை குளிர் காலம் முடியும் வரை தவிர்க்க வேண்டும்.

குளிர்சாதன பெட்டியில் இருந்து பயன் படுத்தப்படும் உணவுப்பொருட்களை அப்படியே பருகாமல், அதை சுட வைத்து பின்னர் உண்ண வேண்டும்.

அம்மா கூறிய இந்த நான்கு அறிவுரைகளையும், எல்லா சக்திகளும் தத்தம் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு எடுத்து உரைக்குமாறு அருள்திரு அம்மா அவர்கள் நமக்கு அறிவுரை கூறியுள்ளார்கள்.

இன்று உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் பன்றிக்காய்ச்சலுக்கு (Swine Flu) அன்னை அருளிய தடுப்பு மருந்து:

"வேப்பிலை, துளசி, மஞ்சள் ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து நன்றாக அறைத்து (like paste) அதை இரண்டு வாச் பட்டை(Watch strap) அளவுள்ள இரண்டு துணிகளில் நனைத்து, அதனை இரண்டு கைகளின் மணிக்கட்டுகளிலும் சுற்றிக் கொள்ள வேண்டும். அவை மூன்று நாட்களுக்கு அப்படியே இருக்க வேண்டும்.

மூன்று நாட்களும் :

(1) ஒரு வேப்பிலை, ஒரு துளசியை காலையில் சாப்பிட வேண்டும்,
(2) அசைவ உணவு சாப்பிடக் கூடாது.
(3) குளிர்சாதன பெட்டியில் வைத்த எதையும் சாப்பிடக் கூடாது.
(4) குளிர்சாதன அறையில் உறங்கக்கூடாது.

மூன்று நாள் கழித்து அந்த துணிகளை எடுத்து ஓடும் நீரில் விட்டு விட வேண்டும்."

இந்த அற்புதமான எளிய மருந்தை நீங்களும் பயன்படுத்துங்கள், உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Mother Goddess Melmaruvathur Adhiparasakthi’s Medicine to prevent Swine Flu:

To Prevent Swine Flu Mother Goddess Adhiparasakthi’s has given some medicine today.

“Take equal portion of Neem leaves, Tulsi leaves and Turmeric; grind them as paste.

Take two pieces of cloths like watch strap, deep the cloth pieces in to the paste and tie in your two wrists. Keep them for three days in your wrists.

For these three days:

(1) Take a neem leave and a Tulasi leave in the mornings.

(2) Do not take non-vegetarian foods.

(3) Do not eat any food preserved in Refrigerator.

(4) Do not sleep in Air-conditioned rooms.

At the end of the third day, remove the cloths strap from your wrists and throw them in running water.”

Please use this simple and divine medicine and forward it to your friend and relatives to prevent swine flu.

Omsakthi!


அன்னையின் அருள்வாக்கு:

மக்களின் மனநிலைக்கு ஏற்பவே

இங்கு மாரியும் இருக்கும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

அழிவுதான் முடிவு:

"ஆன்மிகத்தில் ஈடுபடாமல் பாவத்திற்கு மேல் பாவம் செய்துகொண்டே போனால் அழிவுதான் ஏற்படும்."

இறுதிவரை முக்கியத்துவம்:

"உங்கள் படிப்பு; பணம்; உத்தியோகம்; இவற்றுக்கெல்லாம் ஒரு காலத்தில் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும். உங்கள் ஆன்மிக ஈடுபாட்டிற்கு மட்டும் எப்போதும் முக்கியத்துவம் உண்டு."

எல்லாம் நானே !

"கொடுப்பதும் நான் தான்; பறிப்பதும் நான் தான். இனிப்பும் நானே ! நல்லதும் நானே ! கெட்டதும் நானே !

ஆன்ம பரிபக்குவம் ஏற்பட்டால் தான் இது புரியும்.

என்னிடம் நம்பிக்கை வைத்தவர்கள் வீண் போவதில்லை."

அன்னையின் அருள்வாக்கு:

பக்தி அதிகமாவது அமாவாசையில் தான்.

கருத்தரிப்பும், வளர்வதும் இருட்டில் தான்.

ஆன்ம வலிமை:

"ஆன்ம வலிமை இருந்தால் உங்களுக்கு எந்த வலியும் தெரியாது."

மரம்: மனிதன்:

"மரத்திலிருந்து தான் இலை, பூ, காய், கனி என்பன தோன்றுகின்றன. அதுபோலவே மனிதன் உள்ளத்திலிருந்து தான் விருப்பு, வெறுப்பு, நல்லது, கெட்டது என்ற எண்ணங்கள் தோன்றுகின்றன."

மனிதன் மிருகமாகிவிடுவான்:

"ஆன்மிகத் தொண்டும், வழிபாடும், ஆன்மா வளர்ச்சியும் இல்லாவிட்டால் மனிதன் மிருகமாக மாறிவிடுவான்."


ஒருவன் தன்னைத் தானே அறிவது; தன்னைத் தானே உணர்வது;

தன்னைத் தானே புரிந்து கொள்வதே ஆன்மிகம்.

மரமும் - மனிதனும்:

"மரம் சாய்ந்து விட்டால் பயனுண்டு. மனிதன் சாய்ந்து விட்டால் பயனில்லை."

தெய்வ விக்கிரகம்:

" பொம்மையை (விக்கிரகம்) வைத்துக் கொண்டு பித்தலாட்டம் நடத்தக் கூடாது. அந்தப் பிம்பத்தை ( சிலையயை ) வைத்துக் கொண்டு இந்தப் பிம்பத்தை (தெய்வத்தை) ஏமாற்றக் கூடாது."

இன்பம் துன்பம்

உங்களை நான் புடம்போட்ட தங்கமாக உருவாக்கவே உங்களுக்குத் தாள முடியாத வேதனைகளையும் பல சோதனைகளையும் அளிக்கிறேன். துன்பத்தின் மூலம்தான் சிறந்த அனுபவம் கிட்டும். அதை அனுபவித்தே பெற வேண்டும். இவ்வுலகத் துன்பங்களையும் ஊழ்வினைகளையும் நீங்கள் இப்போதே என் முன்னாலேயே அனுபவித்துக் கழித்து விட வேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு

Joy and Sorrow

“In order to shape you as purified gold, I give you unbearable agonies and several trials and tribulations. You gain significance only through sorrow. You should gain that only by experiencing that. You must finish experiencing the fruit of your evil actions of the past birth, and the sorrow due to your actions in the present, now itself, in my presence.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

ஆலமரமும் - தருமமும்

ஆலமரம் விழுதுகளை ஊன்றித் தன்னையும் பாதுகாத்துக் கொள்கிறது. மற்றவர்களையும் பாதுகாக்கிறது. அதுபோல நீங்கள் தருமம் என்னும் விழுதுகளை ஊன்றி உங்களைப் பாதுகாத்துக் கொள்வதுடன் மற்றவர்களுக்கும் பயன்படுமாறு வாழவேண்டும். ஒரு விதை பல பழங்களாகின்றது. ஒரு கிளை பல கிளைகளாகின்றது. ஒரு குலை பல மரக்குலைகளாகின்றது. அதுபோல நீ தனி ஒருவனாக இருந்தாலும் பலருக்கு நன்மை செய்து வாழவேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு

The Banyan Tree – Charity

“By sending its root firmly down, the banyan tree protects itself and also protects others. Similarly you should send down your roots of charitable actions for protecting yourself and for being useful to others. A seed becomes many fruits, a branch grows into many branches, a bunch become several of the tree. Similarly, though you are a single individual, you should always involve in activities that will ensure the welfare of many people.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

அன்னையின் அருள்வாக்கு:

சக்தி எந்த ரூபம்? தருமம் எந்த ரூபம்?

என்பது உங்களுக்குத் தெரியாது.

ஆன்மாவில் அழுக்கு சேரக்கூடாது:

"உள்ளுக்குள் பொறாமைக்குணம் இருக்ககூடாது. பாசம் இருக்கலாம். அது பாவமாக மாறிவிடக் கூடாது. சிரிப்பு இருக்கலாம் அது வஞ்சகச் சிரிப்பாக இருக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது ஆன்மாதான். அந்த ஆன்மாவில் அழுக்கு சேராதபடிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்."

உடல்: உயிர்: ஆன்மா:

"ஈசலுக்காகப் புற்று அமைந்திருப்பது போல உயிருக்காக உடலும், உடலுக்காக ஆன்மாவும் அமைந்திருக்கின்றன."

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

உன் முயற்சியும் வேண்டும் - அன்னையின் அருள்வாக்கு

அழிவுகளிடையே....

"அழிவுகள் வரக்காத்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் பொறாமை ஏற்படும். சொத்து, சுகம் எதுவும் உங்களுக்குத் துணை வராது. நீங்கள் செய்யும் தருமம் தான் துணை வரும்." - அன்னையின் அருள்வாக்கு

In the Midst of Destruction……..

“There’s surely destruction waiting for you. Whatever good deeds you perform, you will be envied. Your material gains will not support you. Your charitable deeds alone will protect you from ruin.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle



உன் முயற்சியும் வேண்டும்

"மகனே! குழந்தை பிறந்து அதற்குப் பசி ஏற்படுகிறது. பசியால் அழுகிறது. கை கால்களை உதறிக் கொள்கிறது. அதன் தேவைக்காகப் பசியை ஏற்படுத்தி வைத்திருக்கிறேன். அழுகிற சக்தியைக் கொடுத்திருக்கிறேன். அழுகிற குழந்தையைத் தூக்கி வைத்துத் தாய் என்ன செய்கிறாள்? தன் மார்பில் வைத்துக் கொள்கிறாள். பாலை உறிஞ்சிக் குடித்துக் கொள்ள வேண்டிய முயற்சி யாருடையது? அந்தக் குழந்தையினுடையதல்லவா? அது போல இங்கே சில வாய்ப்புகளை நான் உங்களுக்கு ஏற்படுத்தித்தான் கொடுக்க முடியும். மற்ற முயற்சிகளை நீ தான் மேற்கொள்ள வேண்டும். நீ தான் முயன்று உயரவேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு


Your Effort is also Necessary

“My son! The infant cries in hunger as soon as, it is born. It shakes its hands and legs. I have created hunger so that is can get its needs fulfilled. I have bestowed it with the power of cry. What does the mother do? She tries to breast feed the infant. Who has to take the effort? It is upto the infant to suck milk from its mother’s breast. Similarly I can create many opportunities for you. It is upto you to grab them and progress.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle


தருமம்

"பதவிக்கு அப்பாற்பட்டது தருமம், பரம்பரை பரம்பரையாகத் தருமம் செய்யவேண்டும. அதைவிட்டு இனி கோடி வைத்திருந்தாலும் பயனில்லை. தருமம் செய்தால் தான் சிந்தனை தெளிவு பெறும். தேவையறிந்து தருமம் செய்யவேண்டும். அப்படிச் செய்வதால் அவனுடைய பாரமும் குறைகிறது. உன்னுடைய பாவமும் குறைகிறது." - அன்னையின் அருள்வாக்கு


Charity


“Charity is beyond positions of power. Charity is an act of heredity. It is no use, if you possess crores of money. It will only invite ‘noose to the neck’. Thoughts will gain clarity only if you involve in acts of charity. If the charity is done according to the need of the person who benefits from it, his burden will become light and your sin will be reduced.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle


ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

பூமியைப் பள்ளமாக்கிக் கொண்டே போனால், காற்றழுத்தம் காரணமாய்ப் பூகம்பங்கள் ஏற்படும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மிகத்தில் உடும்புப்பிடி :

"ஆன்மிகத்துக்கு வந்துவிட்ட பிறகு இருப்பதை வைத்து முன்னேற வேண்டும். இல்லாததைத் தேடி அலையக்கூடாது. உங்களுக்கெல்லாம் ஆன்மிகத்தில் அதிகமான பிடிப்பு இருக்க வேண்டும். அந்தப்பிடி உடும்புப்பிடியாக இருக்கவேண்டும்."

இயந்திர இயக்கமும் - மனித இயக்கமும்:

"ஓர் இயந்திரம் இயங்க வேண்டுமானால் சக்தி தேவை. மனிதர்களாகிய நீங்கள் இயங்கவும் சக்தி தேவை. உன் இதயம் இயங்குவதே என் சக்தியால் தான் !

இயந்திரம் ஓடும்போது சூடாகிறது. அதனை இயக்குகிற எண்ணெயும் சூடாகிறது. அதுபோல் உன் உடல் இயங்கும் போது உடல் சூடாகிறது.. உடலின் இயக்கத்தைப் பொறுத்து ஆன்மாவும் சுத்தமாகிறது."


ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

பணம் சேரச் சேர அமைதியும்


அகன்று போகும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மா பூப்போன்றது:

"நீரிலும் பூ உண்டு; நெருப்பிலும் பூ உண்டு; ரோஜாவிலும் பூ உண்டு; மனிதனிடமும் பூ உண்டு; அந்தப் பூதான் ஆன்மா ! ஆன்மா பூப்போன்றது. உங்கள் எல்லோருடைய ஆன்மாவும் என்னிடமே உள்ளது. அதற்கு நானே பொறுப்பு. எல்லாவற்றையும் விட ஆன்மா உயர்ந்தது. ஆன்மாவின் உயர்ந்த பொருளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்."

ஆன்மா தூய்மை அடைய:

"நெருப்பிலிட்ட பொருள்கள் தூய்மையடைவது போல, ஆன்மிகப் பணிகள் செய்யச் செய்ய உன் ஆன்மாவைச் சுற்றிப் படர்ந்திருக்கும் அழுக்குகள் நீங்கித் தூய்மையாகும்.."

நெருப்பும் ஆன்மாவும்:

"நெருப்பு உண்டாவதே ஒரு சக்தியால் தான் ! நீ இயங்குவதும் ஒரு சக்தியால் தான். உன்னை இயக்குகிற சக்தி அம்மா தான் ! உன் உள்ளம் சுத்தமாக இருந்தால் உன் உள்ளே இருக்கிற ஆன்மாவும் சுத்தமாக இருக்கும்."



செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

சோதனைகள்,வேதனைகள் ஏன்?

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

ஆன்மிகத்தில் தஞ்சம் அடைந்தால்

தான் அமைதி கிடைக்கும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

மாயையை வெல்ல:

" தொலைவில் உள்ள கானல் நீரைக்கண்டு உண்மையான நீர் என்று ஓடி ஏமாறுகிறாய். சூரிய ஒளியில் பிரகாசிக்கும் ஒரு கண்ணாடிக் கல்லைப் பார்த்து வைரம் என்று நம்பி ஏமாறுகிறாய்.

மாயையை காரணமாக என்னை விட்டுவிட்டு வேறிடங்களுக்குச் சென்று ஏமாறுகிறாய்.

வெறும் தோற்றத்தைக் கண்டு நம்பி ஏமாறாமல் என்னையே பற்றிக் கொண்டிருப்பவன் மாயையை வெல்வான். பொய்த் தோற்றம் கண்டு ஏமாரமாட்டன். உண்மையான வைரத்தை அடைவான்."

பழமும் - பள்ளமும்:

" மரத்தில் பழம் பல பழுத்துத் தொங்குகிறது. பழுத்த பழத்தைக் கல்லால் அடிக்கிறார்கள். பழம் அடிபட்டும் கீழே விழவில்லை. என்றாலும் பழத்திற்குக் காயம் ஏற்படுகிறது. பள்ளம் விழுகிறது.. அது உனக்கும் பயன்படுவதில்லை. சிலநாள் கழித்துப் பழமும் கெட்டுப் போய்க் கொட்டைக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

அதுபோல ஆன்மிகத்தில் மனிதன் தன் உள்ளத்தில் மன அழுக்குகளால் பள்ளம் ஏற்படாதபடிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவனுக்கும் பயன்; மற்றவர்க்கும் பயன்."

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

வெளியே தெரியாமல் தருமம் செய்வதே உண்மையான


தருமம். அதுவே உண்மையான ஆன்மிகம்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

பாவத்தின் சம்பளம்:

" நீ செய்யும் பாவம் பணமாகவும், கொலையாகவும் மாறுகிறது."

உடலை ஆட்டுவிக்கும் ஆன்மா:

" உடலுறுப்பு ஒவ்வொன்றும் அதனதன் வேலையைச் செய்கிறது. இதனைச் செய்துதான் ஆகவேண்டும் என்று உடலை ஆன்மா ஆட்டுவிக்கிறது.

உடலுக்கேற்ற ஆன்மாவும், ஆன்மாவிர்கேற்ற உடலும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் வைரம் பாய்ந்த மரம்போல் இருக்கும்."

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

பொய்யும், பித்தலாட்டமுமே இன்றைய

அழிவுகளுக்கு முக்கியக் காரணம்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

வேதனைகள் ஏன்?

" எத்தனை உருவங்களில் இருந்தாலும் உணவு என்பது ஒன்றுதான். மனிதன் எத்தனை உருவங்களில் இருந்தாலும் உள்ளம் என்பது ஒன்று தான்.

உண்ட பிறகு உடலில் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறி ஆகவேண்டும். அவ்வாறே உள்ளத்தில் படிந்துள்ள கழிவுகளும் வெளியேறி ஆகவேண்டும்.

உள்ளத்தில் படிந்த கழிவுகளே உங்களுக்கு வேதனைகளாக வெளியேற்றப் படுகின்றன."

நான் தேடி வருவதும்: நீங்கள் தேடி வருவதும்:

" குழந்தைக்குப் பசி எடுக்கிற போது தாயே தேடி வந்து உணவை ஊட்டுகிறாள். வளர்ந்த பிறகு குழந்தை தான் உணவுக்குகாகத் தாயிடம் ஓடி வரும். அதுபோல நீங்கள் என்னை நெருங்காத போது நான் உங்களை தேடி வருவேன். நீங்கள் நெருங்கும் போது நான் உங்களை நாடி வரமாட்டேன்."

வெள்ளி, 31 ஜூலை, 2009

அலைவரிசைகளை அடிக்கடி மாற்றக்கூடாது: அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

மனத்தில் உள்ள அழுக்கை ஆன்மிகம்


என்னும் அலையானது வெளியேற்றுகிறது.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மிகம் என்ற மலைமேல் ஏறி வரும்போது...

" ஆன்மிகம் என்கிற மலைமேல் ஏறி வருகிறபோது பந்தம்,பாசம் என்கிற முட்கள் படர்ந்திருக்கும். அவை குத்தும். எனவே, பந்த பாசங்களை அப்புறப்படுத்திவிட்டு " அம்மா" என்கிற கயிற்றைப் பிடித்துக் கொண்டு எரிவரவேண்டும். ஐயோ கால் சுளுக்குமே என்ற சந்தேகமே வரக்கூடாது. அம்மாவின் அருள் கிடைக்கும் என்ற ஒரே சிந்தனையோடு மேலே ஏறிவர வேண்டும்."

அலைவரிசைகளை அடிக்கடி மாற்றக்கூடாது:

" வானொலிப் பெட்டியில் ஒரு அலைவரிசை சரியாக வரவில்லையென்றால் - ஒளியைக் கேட்க முடியவில்லையென்றால் அடுத்த அலைவரிசைக்கு மாற்றிக் கொள்கிறீர்கள். அதுபோல ஒரு தெய்வத்திடம் முழுமையாக நம்பிக்கை வைக்காமல் அடுத்த ஒரு தெய்வத்திடம் ஓடுகிறீர்கள்.

ஆன்மிகம் என்ற வானொலிப் பெட்டியில் அலைவரிசைகளை அடிக்கடி மாற்றக் கூடாது.

ஒருபுறம் மேல்மருவத்தூருக்கு என்று வருவது. இன்னொரு புறம்

நாடிஜோதிடம், ஜாதகம் என்றும் சினிமா, அரசியல் என்றும் அலைவரிசைகளுக்கு மாறக்கூடாது."


"தரும நெறியில் வாழ்பவனுக்குத்தான் இனி பாதுகாப்பு உண்டு."
- அன்னையின் அருள்வாக்கு

“Only those who live by righteousness will be secure.”
– Mother Goddess Adhiparasakthi’s Oracle


"உங்கள் உள்ளத்தில் நல்ல எண்ணங்களே தோன்ற வேண்டும். நீங்கள் பேசுகிற வார்த்தைகளிலும் நல்லுணர்வே வெளிப்படவேண்டும். அத்துடன் உங்கள் ஆன்மாவிலும் நல்லெண்ணங்கள் புகுதல் வேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு


“Good thoughts should come to you. Your speech should have good feeling. Moreover good thought should enter your soul.” - Mother Goddess Adhiparasakthi’s Oracle

"ஈட்டி எட்டியவரை பாயும்; பணம் பாதாளம் வரை பாயும் என்று தானே இதுவரை கேட்டிருக்கிறீர்கள். பக்தி அதற்கு மேலும் பாயும் என்பதை உங்களுக்கு உணர்த்துவேன்." - அன்னையின் அருள்வாக்கு

“You have only heard that the spear will go as far it is thrown, and that money will reach the under-world. I shall make you understand that devotion will go even beyond that.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle




செவ்வாய், 28 ஜூலை, 2009

உதவுகிற மனப்பான்மை முதலில் வரவேண்டும்.அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

அன்னையின் அருள்வாக்கு:

தருமம் என்பது உன் கருமம்


தீர்க்கத் தான் என்று புரிந்து கொள்!

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மிகப் பாதை:

" நீ செல்கிற பாதை நல்லதாக இருந்தால் உன் பார்வையும் நல்லதாக இருக்கும். வாழ்க்கையில் நீ தேர்ந்தெடுக்கும் பாதை தீமையானது என்றால் உனக்கு ஆபத்துகளும் தொடரும்.

உன்னைச் சுற்றியிருப்பவர்கள் உன் காலைப் பிடிப்பது போல் காலை வாரிவிடுவார்கள். உன் கழுத்தைப் பிடிப்பது போல் நடித்து உன் கண்ணையே குத்துவார்கள்.

நீ ஆன்மிகப் பாதையினைத் தேர்ந்தெடுத்து வாழத் தொடங்கினால் அத்தகைய ஆபத்துக்கள் குறைவு."

ஆன்மிகம் என்ற பாதுகாப்பு:

" ஒரு வீட்டிற்குப் பாதுகாப்பு கருதி வாயிற்படியையும், கதவையும் அமைத்து கொள்கிறீர்கள். அதுபோல உங்கள் வாழ்க்கைக்குப் பாதுகாப்பாக ஆன்மிகத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே பிறர் துன்பத்தையும் தன துன்பமாக நினைத்து உதவுகிற மனப்பான்மை முதலில் வரவேண்டும்."

"அடிமேல் அடி அடித்தால் தான் அம்மியும் நகரும். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். அதனால் தான் உங்களை அடிமேல் அடி அடித்து உங்கள் உள்ளத்தில் உள்ள அழுக்கை நீங்கச் செய்கிறேன்." - அன்னையின் அருள்வாக்கு

“Continuous pressure makes the stone move, and a thorn is picked by another thorn. Hence I am raining blows on you to remove the impurity in your mind.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle


"அழிவுகள் வரக்காத்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் பொறாமை ஏற்படும். சொத்து, சுகம் எதுவும் உங்களுக்குத் துணை வராது. நீங்கள் செய்யும் தருமம் தான் துணை வரும்."

- அன்னையின் அருள்வாக்கு


“Animals are born. They grow. They procreate with the feeling of lust. Then they die. But man should not live like animals and die. He should lead a progressive life by involving himself in spirituality, by practicing self-control and performing charitable deeds.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle


"விலங்கினங்கள் பிறக்கின்றன். வளர்கின்றன். காம உணர்வோடு இனப்பெருக்கம் செய்கின்றன. இறந்து போகின்றன. மனிதன் விலங்குபோல் வாழ்ந்து மறையக்கூடாது. ஆன்மிகத்தில் ஈடுபட்டு, உணர்வை அடக்கிக் கட்டுப்படுத்தி, தருமம் செய்து வாழ்ந்து முன்னேறி வரவேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு


அன்னையின் அருள்வாக்கு:

ஈட்டி எட்டிய வரை பாயும், பணம் பாதாளம்


வரை பாயும், பக்தி அதற்கு மேலும் பாயும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

அகங்காரம் ஆபத்து:

" பறவைகளின் எச்சத்தினால் விழுந்த ஆழம் விதைகள் பூமியிலும் வளர்ந்து செடியாகின்றன. கோபுரத்தில் மீதும் விழுந்து செடியாகின்றன. கோபுரத்தில் அந்தச் செடி வளர்வதற்கு ஈரப்பசையும், மழையும் காரணமாகின்றன.

பூமியில் வளரும் செடியை விட நான் உயர்ந்தவன் என்று கோபுரத்தைச் செடி நினைக்கலாமா...?

ஆன்மிகத்துறைக்கு வந்துவிட்டதால் கிடைக்கிற மதிப்பு, மரியாதைகளை வைத்து ஒருவன் தான் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டதாக எண்ணிக் கொள்ளக் கூடாது.

கோபுரத்தில் ஒரு விரிசல் ஏற்படுவதைக் கண்டவுடனே அந்தச் செடி வேரோடு பறித்து எறியப்படுகிறது. அதுபோல ஆன்மிகத்தில் அகங்காரம் தலைக்கேரியவர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள்."

ஆன்மா ஒன்றுதான்:

"இன்றைய மனிதகுலத்தில் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு தெய்வத்தை வைத்து வணங்கி வருகிறது. என்றாலும் ஆன்மா என்பது ஒன்றுதான்."







Blog Widget by LinkWithin