வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

உன் முயற்சியும் வேண்டும் - அன்னையின் அருள்வாக்கு

அழிவுகளிடையே....

"அழிவுகள் வரக்காத்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் பொறாமை ஏற்படும். சொத்து, சுகம் எதுவும் உங்களுக்குத் துணை வராது. நீங்கள் செய்யும் தருமம் தான் துணை வரும்." - அன்னையின் அருள்வாக்கு

In the Midst of Destruction……..

“There’s surely destruction waiting for you. Whatever good deeds you perform, you will be envied. Your material gains will not support you. Your charitable deeds alone will protect you from ruin.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle



உன் முயற்சியும் வேண்டும்

"மகனே! குழந்தை பிறந்து அதற்குப் பசி ஏற்படுகிறது. பசியால் அழுகிறது. கை கால்களை உதறிக் கொள்கிறது. அதன் தேவைக்காகப் பசியை ஏற்படுத்தி வைத்திருக்கிறேன். அழுகிற சக்தியைக் கொடுத்திருக்கிறேன். அழுகிற குழந்தையைத் தூக்கி வைத்துத் தாய் என்ன செய்கிறாள்? தன் மார்பில் வைத்துக் கொள்கிறாள். பாலை உறிஞ்சிக் குடித்துக் கொள்ள வேண்டிய முயற்சி யாருடையது? அந்தக் குழந்தையினுடையதல்லவா? அது போல இங்கே சில வாய்ப்புகளை நான் உங்களுக்கு ஏற்படுத்தித்தான் கொடுக்க முடியும். மற்ற முயற்சிகளை நீ தான் மேற்கொள்ள வேண்டும். நீ தான் முயன்று உயரவேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு


Your Effort is also Necessary

“My son! The infant cries in hunger as soon as, it is born. It shakes its hands and legs. I have created hunger so that is can get its needs fulfilled. I have bestowed it with the power of cry. What does the mother do? She tries to breast feed the infant. Who has to take the effort? It is upto the infant to suck milk from its mother’s breast. Similarly I can create many opportunities for you. It is upto you to grab them and progress.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle


தருமம்

"பதவிக்கு அப்பாற்பட்டது தருமம், பரம்பரை பரம்பரையாகத் தருமம் செய்யவேண்டும. அதைவிட்டு இனி கோடி வைத்திருந்தாலும் பயனில்லை. தருமம் செய்தால் தான் சிந்தனை தெளிவு பெறும். தேவையறிந்து தருமம் செய்யவேண்டும். அப்படிச் செய்வதால் அவனுடைய பாரமும் குறைகிறது. உன்னுடைய பாவமும் குறைகிறது." - அன்னையின் அருள்வாக்கு


Charity


“Charity is beyond positions of power. Charity is an act of heredity. It is no use, if you possess crores of money. It will only invite ‘noose to the neck’. Thoughts will gain clarity only if you involve in acts of charity. If the charity is done according to the need of the person who benefits from it, his burden will become light and your sin will be reduced.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle


ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

பூமியைப் பள்ளமாக்கிக் கொண்டே போனால், காற்றழுத்தம் காரணமாய்ப் பூகம்பங்கள் ஏற்படும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மிகத்தில் உடும்புப்பிடி :

"ஆன்மிகத்துக்கு வந்துவிட்ட பிறகு இருப்பதை வைத்து முன்னேற வேண்டும். இல்லாததைத் தேடி அலையக்கூடாது. உங்களுக்கெல்லாம் ஆன்மிகத்தில் அதிகமான பிடிப்பு இருக்க வேண்டும். அந்தப்பிடி உடும்புப்பிடியாக இருக்கவேண்டும்."

இயந்திர இயக்கமும் - மனித இயக்கமும்:

"ஓர் இயந்திரம் இயங்க வேண்டுமானால் சக்தி தேவை. மனிதர்களாகிய நீங்கள் இயங்கவும் சக்தி தேவை. உன் இதயம் இயங்குவதே என் சக்தியால் தான் !

இயந்திரம் ஓடும்போது சூடாகிறது. அதனை இயக்குகிற எண்ணெயும் சூடாகிறது. அதுபோல் உன் உடல் இயங்கும் போது உடல் சூடாகிறது.. உடலின் இயக்கத்தைப் பொறுத்து ஆன்மாவும் சுத்தமாகிறது."


ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

பணம் சேரச் சேர அமைதியும்


அகன்று போகும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மா பூப்போன்றது:

"நீரிலும் பூ உண்டு; நெருப்பிலும் பூ உண்டு; ரோஜாவிலும் பூ உண்டு; மனிதனிடமும் பூ உண்டு; அந்தப் பூதான் ஆன்மா ! ஆன்மா பூப்போன்றது. உங்கள் எல்லோருடைய ஆன்மாவும் என்னிடமே உள்ளது. அதற்கு நானே பொறுப்பு. எல்லாவற்றையும் விட ஆன்மா உயர்ந்தது. ஆன்மாவின் உயர்ந்த பொருளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்."

ஆன்மா தூய்மை அடைய:

"நெருப்பிலிட்ட பொருள்கள் தூய்மையடைவது போல, ஆன்மிகப் பணிகள் செய்யச் செய்ய உன் ஆன்மாவைச் சுற்றிப் படர்ந்திருக்கும் அழுக்குகள் நீங்கித் தூய்மையாகும்.."

நெருப்பும் ஆன்மாவும்:

"நெருப்பு உண்டாவதே ஒரு சக்தியால் தான் ! நீ இயங்குவதும் ஒரு சக்தியால் தான். உன்னை இயக்குகிற சக்தி அம்மா தான் ! உன் உள்ளம் சுத்தமாக இருந்தால் உன் உள்ளே இருக்கிற ஆன்மாவும் சுத்தமாக இருக்கும்."



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin