திங்கள், 24 ஆகஸ்ட், 2009

நீ ஒரு விளையாட்டுப் பொருள்:அன்னையின் அருள்வாக்கு:

அன்புக்குரிய சக்திகளுக்கு,
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
வினைகளை களைபவனே !
நலங்களை தருபவனே - விநாயகனே
என வணங்குவோம், வளம்பெறுவோம் !

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

ஆன்மிகத்தை உலகமே எதிர்க்கும்.

அது தான் கலியுகத்தின் இயல்பு.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆடையில்லாதவன் அரைமனிதனா?

"ஆடையில்லாதவன் அரை மனிதன் என்பார்கள். ஆடையில்லாதவன் தான் முழு மனிதன் !"

ஆன்மா உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்:

"ஆடி - ஓடி - பாடிக் கடைசியில் தெய்வத்தை அடைந்து சிலை அழகைப் பார்த்து, ஆடை அணிகலன்கள் பூட்டி மகிழ்ந்து,கற்பூரம் ஏற்றித் தேங்காய் உடைத்தால் மட்டும் போதாது. உள்ளத்தை உடைத்து, ஆன்மா உடையாமல் பாத்துக் கொள்ள வேண்டும்."

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

மிருகமெல்லாம் முன்னேறி மனிதநிலைக்கு வருகின்றன.

மனிதனோ முன்னேறிப் போகாமல் மிருகமாக மாறி வருகிறான்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

நீ ஒரு விளையாட்டுப் பொருள்:

"இந்த உலக அரங்கில் நீ ஒரு விளையாட்டுப் பொருள் என்பதை மறந்துவிடக் கூடாது."

புகழாசை கூடாது:

"ஆன்மிகத்தில் இருப்பவன் தன்னைப் புகழவேண்டும் என்பதற்காக எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது. இயற்கை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றித் தன் கடமையைச் செய்கிறது. அதுபோலவே ஓர் ஆன்மிகவாதியும் எந்த ஒரு எதிபார்ப்பும் இன்றி ஆன்மிகப் பனி செய்யவேண்டும்."

ஆராய்ச்சி தேவையற்றது:

"ஆன்மிகத்திற்கு வந்துவிட்ட பிறகு மனம் திருந்தி வாழ்வதற்கே முயலவேண்டும். அதை விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆராய்ச்சி செய்வது தேவையற்றது. அதனால் உனக்குக் காலம் தான் வீணாகும்."



2 கருத்துகள்:

  1. நல்ல கருத்து. தொடரட்டும் கார்த்திகேயன் உங்கள் ஆண்மீகபணி .

    பதிலளிநீக்கு
  2. அருமை நண்பர் கும்மாச்சி உங்கள் மேலான ஆதரவிற்கு ரொம்ப நன்றி

    பதிலளிநீக்கு

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin