ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு: ஆன்மிகத்தில் தஞ்சம் அடைந்தால் தான் அமைதி கிடைக்கும்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
மாயையை வெல்ல:
" தொலைவில் உள்ள கானல் நீரைக்கண்டு உண்மையான நீர் என்று ஓடி ஏமாறுகிறாய். சூரிய ஒளியில் பிரகாசிக்கும் ஒரு கண்ணாடிக் கல்லைப் பார்த்து வைரம் என்று நம்பி ஏமாறுகிறாய்.
மாயையை காரணமாக என்னை விட்டுவிட்டு வேறிடங்களுக்குச் சென்று ஏமாறுகிறாய்.
வெறும் தோற்றத்தைக் கண்டு நம்பி ஏமாறாமல் என்னையே பற்றிக் கொண்டிருப்பவன் மாயையை வெல்வான். பொய்த் தோற்றம் கண்டு ஏமாரமாட்டன். உண்மையான வைரத்தை அடைவான்."
பழமும் - பள்ளமும்:
" மரத்தில் பழம் பல பழுத்துத் தொங்குகிறது. பழுத்த பழத்தைக் கல்லால் அடிக்கிறார்கள். பழம் அடிபட்டும் கீழே விழவில்லை. என்றாலும் பழத்திற்குக் காயம் ஏற்படுகிறது. பள்ளம் விழுகிறது.. அது உனக்கும் பயன்படுவதில்லை. சிலநாள் கழித்துப் பழமும் கெட்டுப் போய்க் கொட்டைக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
அதுபோல ஆன்மிகத்தில் மனிதன் தன் உள்ளத்தில் மன அழுக்குகளால் பள்ளம் ஏற்படாதபடிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவனுக்கும் பயன்; மற்றவர்க்கும் பயன்."
ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
வெளியே தெரியாமல் தருமம் செய்வதே உண்மையான
தருமம். அதுவே உண்மையான ஆன்மிகம்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
பாவத்தின் சம்பளம்:
" நீ செய்யும் பாவம் பணமாகவும், கொலையாகவும் மாறுகிறது."
உடலை ஆட்டுவிக்கும் ஆன்மா:
" உடலுறுப்பு ஒவ்வொன்றும் அதனதன் வேலையைச் செய்கிறது. இதனைச் செய்துதான் ஆகவேண்டும் என்று உடலை ஆன்மா ஆட்டுவிக்கிறது.
உடலுக்கேற்ற ஆன்மாவும், ஆன்மாவிர்கேற்ற உடலும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் வைரம் பாய்ந்த மரம்போல் இருக்கும்."ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு: பொய்யும், பித்தலாட்டமுமே இன்றைய அழிவுகளுக்கு முக்கியக் காரணம்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
வேதனைகள் ஏன்?
" எத்தனை உருவங்களில் இருந்தாலும் உணவு என்பது ஒன்றுதான். மனிதன் எத்தனை உருவங்களில் இருந்தாலும் உள்ளம் என்பது ஒன்று தான்.
உண்ட பிறகு உடலில் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறி ஆகவேண்டும். அவ்வாறே உள்ளத்தில் படிந்துள்ள கழிவுகளும் வெளியேறி ஆகவேண்டும்.
உள்ளத்தில் படிந்த கழிவுகளே உங்களுக்கு வேதனைகளாக வெளியேற்றப் படுகின்றன."
நான் தேடி வருவதும்: நீங்கள் தேடி வருவதும்:
" குழந்தைக்குப் பசி எடுக்கிற போது தாயே தேடி வந்து உணவை ஊட்டுகிறாள். வளர்ந்த பிறகு குழந்தை தான் உணவுக்குகாகத் தாயிடம் ஓடி வரும். அதுபோல நீங்கள் என்னை நெருங்காத போது நான் உங்களை தேடி வருவேன். நீங்கள் நெருங்கும் போது நான் உங்களை நாடி வரமாட்டேன்."
நல்லப் பதிவு, உங்களுக்கு என்னுடைய பின்னூட்டமும், ஊக்கங்களும் எப்பொழுதும் உண்டு.
பதிலளிநீக்குஅதே தான் உங்களுக்கும் நண்பர் கும்மாச்சி
பதிலளிநீக்குகொஞ்சம் பொறுமையா எல்லா பதிவுக்கும் ஒட்டு போட்டுடுங்க ஜி.
அப்போ தான் பாபுலர் ஆக்குறாங்க.
இன்னும் அதிகம் பேர் வருவாங்க
ரொம்ப நன்றி