சனி, 18 ஜூலை, 2009

பேரழிவுகள் ஏன் ஏற்படுகின்றன?அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:


நீங்கள் செய்யும் பாவமும், தெய்வ நிந்தனையும்

தான் கோளங்களை வெடிக்கச் செய்கின்றன..


நாத்திக பேய்களை ஓட்டும் மந்திரம் தான்ஓம் சக்தி


அடுத்தவரின் மதத்தையும் மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும்


நாத்திகமே மனித அழிவுப் பாதைக்கு முதற்படி என்பதை உணர்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மாவிற்கு ஓய்வும் அமைதியும்:


"கடலில் எழும்பும் அலைகள் ஓய்வதில்லை. உள்ளத்தில் எழும்பும் ஆசை அலைகளும் ஓய்வதில்லை. நடுக்கடலில் கடல் அலைகள் ஓய்ந்திருக்கும். அதுபோலவே மனித மனத்தில் உள்ள ஆசாபாசங்கள் என்பவற்றை அடக்கினால் மனம் அமைதியடையும். அப்போது ஆன்மாவிற்கு ஓய்வு உண்டு.

உங்கள் ஐம்புலங்களும் ஒன்றி உள்ளம் குளிரும் போது ஆன்மாவும் குளிர்ந்து அமைதி அடைகிறது."


ஆசைகள் இருக்கிற வரை...


"எரிகிற கொள்ளிக்கட்டையைத் தண்ணீரால் அணைத்த பிறகும் சற்றுநேரத்திற்குச் சூடு இருந்தபடியே இருக்கும். நீங்கள் என்னதான் ஆன்மிகத்தில் ஈடுபட்டிருந்தாலும் உள்ளத்தில் ஆசைகள் இருக்கிற வரை துன்பமும் தொடர்ந்து இருக்கும்."


உங்கள் ஆன்ம உணர்வு:


"ஒரு புத்தம் புதுக்கருவியை பேட்டரியால் இயக்குகிறபோது முதலில் நன்றாக வேலை செய்யும் அந்த பேட்டரி தேயத்தேய அந்தக் கருவியும் முன்போல இயங்க மறுக்கும்.

உங்கள் உள்ளே இருக்கிற இதயம் என்ற பேட்டரியைத் தேயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பார்த்துக் கொண்டால் தான் உங்கள் ஆன்மாவும் சுத்தமாக இருக்கும்.

உங்கள் மனத்தில் உள்ள சுத்தத்தைப் பொறுத்தே உங்கள் ஆன்மா சுத்தமடையும்."


எல்லோருமே ஆன்மிகவாதியாக மாறவேண்டும்:


"ஊருக்கு ஒரு ஆன்மிகவாதியும், வீட்டிற்கு ஒரு ஆன்மிகவாதியும் உருவானால் மட்டும் போதாது. எல்லோருமே ஆன்மிகவாதியாக மாறினால் தான் நாட்டில் அமைதி கிடைக்கும். இரண்டு மனங்களும் ஒன்றுபட்டால் தான் அமைதி கிடைக்கும்."

ஆன்மிகத்தில் அவசரம் கூடாது:


"ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றி, பூ பூத்துக் காய் காய்த்து, பழம், பழுக்கும் வரை காத்திருக்கிறீர்கள். அதுபோலவே ஆன்மிக உலகிலும் காத்திருக்கப் பழக வேண்டும். ஆன்மிகத்தில் அவசரம் கூடாது."

"உள்ளத்தெளிவுவோடு ஆன்மிகப் பணிகள் செய்ய உங்களுக்கு வாய்ப்பளிக்கிறேன். வேலைக்காரி ஒருத்தி ஏதோ கடமைக்காகப் பணி செய்து பாத்திரம் தேய்த்தால் பாத்திரமும் சுத்தமாவதில்லை. உள்ளத்திற்கும் தெளிவு ஏற்படுவதில்லை. அன்போடும், உள்ளத் தூய்மையோடும் அவள் பணி செய்யும்போது அவளுக்கு அமைதியும், உள்ளத்தெளிவும் ஏற்படும். அந்த தெளிவு உள்ளவர்களுக்கு ஆன்ம முன்னேற்றத்திற்கு வாய்ப்பு உண்டு." - அன்னையின் அருள்வாக்கு

“I give you chance do spiritual duties with a clear conscience. If the housemaid washes the vessels for the sake of doing her duty, the vessel remain unclean. Her mind does not gain clarity. If she does her work out of love and with a clear conscience she achieves peace and clarity of mind. Since you work for the welfare of other people your mind becomes clear in its perspective. If your mind is clear then you may have a chance to progress in spirituality. “– Mother Goddess Adhiparasakthi’s Oracle


"பறவைகளின் எச்சத்தினால் விழுந்த ஆலம் விதைகள் பூமியிலும் வளர்ந்து
செடியாகின்றன. கோபுரத்தின் மீதும் விழுந்து செடியாகின்றன. கோபுரத்தில் அந்தச் செடி வளர்வதற்கு ஈரப்பசையும், மழையும் காரணமாகின்றன. பூமியில் வளரும் செடியை விட நான் உயர்ந்தவன் என்று கோபுரத்துச் செடி நினைக்கலாமா...?

ஆன்மிகத்துறைக்கு வந்துவிட்டதால் கிடைக்கிற மதிப்பு, மரியாதைகளை
வைத்து ஒருவன் தான் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டதாக எண்ணிக் கொள்ளக் கூடாது.

கோபுரத்தில் ஒரு விரிசல் ஏற்படுவதைக் கண்டவுடனே அந்தச் செடி வேரோடு
பறித்து எறியப்படுக்கிறது. அதுபோல ஆன்மிகத்தில் அகங்காரம் தலைக்கேறியவர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள்." - அன்னையின் அருள்வாக்கு

“The banyan seeds that have fallen on the earth from the excreta of the birds grow into plants. The plants grow on the tower because of moisture and rain.

Can the plant growing on the tower think that it is superior to the plant growing on the earth?

One should not think that he has reached a higher status just because of the respect and honor that he gains as he is in the field of spirituality.

That plant gets uprooted and thrown out when a crack is identified on the tower. Similarly arrogant people are thrown out from the filed of spirituality.”- Mother Goddess Adhiparasakthi’s Oracle

"வெறும் தத்துவம் பேசினால் மட்டும் போதாது. தத்துவத்தில் தாதுப்பொருள் (உரம்) இருக்க வேண்டும். தத்துவத்தைக் காட்டிலும் சத்தியம் பெரிது. சத்தியத்தைப் பின்பற்றி வாழாமல் தத்துவம் பேசி, ஆன்மிகத்தில் முன்னேற முடியாது. பக்தி மிகுந்தவனுக்குத் தத்துவம் தேவையில்லை." - அன்னையின் அருள்வாக்கு


“Empty philosophical speech alone is not enough. Philosophy should have manure (matter). More than philosophy, truth is important. You cannot progress in spirituality by talking philosophy without following truth. A person who is more devoted does not require philosophy.” - Mother Goddess Adhiparasakthi's Oracle


எண்ணங்களும்: பிரதிபலிப்பும்


"காற்றலைகள் உயர்வு தாழ்விற்கு ஏற்றபடி எதிரோலிக்கும், அவை வெற்றிடத்தில் வேலை செய்யாது.

மலையைப் பார்த்து ஓ! என்று சப்தம் எழுப்பினால் அந்தச் சப்தமே எதிரொலிக்கும்.

ஒருவனுடைய புகைப்படம் அவனை அப்படியே பிரதிபலிக்கிறது. அதுபோலவே உங்கள் ஆன்மாவில் பதியும் எண்ணங்களே உங்களிடம் பிரதிபலிக்கின்றன.

ஒவ்வொரு ஆன்மாவிற்கும் ஒவ்வொரு நிலையுண்டு, பணத்தாலும் சொத்துக்களாலும் உங்கள் ஆன்மா பக்குவப்பட்டு விடாது. ஆன்மிகம் ஒன்றால் தான் ஆன்மாவைப் பக்குவப்படுத்த முடியும்.

ஆன்மாவினால் தான் இயற்கையை வெல்ல முடியும். அனைத்திற்கும் அழிவுண்டு. ஆன்மாவிற்கு அழிவில்லை."


பணத்திற்கும், ஞானத்துக்கும் தூரம் அதிகம்:


"பணத்தால் பிறரை வேலை வாங்கலாம். அந்த பணத்தை கொண்டு அழிவையும் தேடிக்கொள்ளலாம். பணத்தால் உண்மை அறிவை வாங்க முடியாது."











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin