வெள்ளி, 10 ஜூலை, 2009

அமைதிக்கு வழி:ஆன்மிகத்திற்கு வழி:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

பகுத்தறிவை எல்லோருக்கும் தான் கொடுத்திருக்கிறேன். எல்லோருமே

அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

அமைதிக்கு வழி:

"சுற்றிலும் இனவெறி, மதவெறி, பணவெறி எனப் பல வெறிகள் உண்டாகி வருகின்றன. ஆன்மிகத்தைப் பற்றிக்கொண்டு கண்ணும் கருத்துமாக எச்சரிக்கையுடன் வாழ்வேண்டும்."

கவலையும் – கண்ணீரும்:

"வெளியில் வரும் கண்ணீரை நீ துடைத்துக் கொள்ளலாம். ஆனால் உள்ளத்தில் வரும் கண்ணீரையும் கவலையையும் நான் தான் துடைக்க வேண்டும். ஆன்மிகத்தில் ஈடுபட்டிருப்பதால் தான் பலரால் தப்பிக்க முடிந்திருக்கின்றது."

ஆன்மிகத்திற்கு வழி:

"அன்பு, தன்னடக்கம், நிதானம் - இவைகள் தான் ஆன்மிகத்திற்கு வழிவகுக்கும்."


"கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு தான் வெளியுலகத்தைப் பார்க்க முடியும் என்பதில்லை. கண்களை மூடிக்கொண்டும் வெளியுலகத்தைப் பார்க்கலாம். தியானம் பழகி வந்தால் இந்த உண்மை புரியும்." - அன்னையின் அருள்வாக்கு

“It is a not necessary that the external world should be viewed only with your eyes open. You can also see the outside world with your eyes closed. You will understand this truth when you practice meditation.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

“There is no meaning in addressing God as Bhaghavan looking up and showing your hand at the sky! Your feet support your body and in turn the earth supports your feet and that earth equivalent to your Mother!” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

"பகவானே! என்று மேலே பார்த்தப்படிக் கையைக் காட்டுவதில் அர்த்தம் ஒன்றுமில்லை. உன் உடலைத் தாங்குகிறதே பாதம், அந்தப் பாதத்தைத் தாங்குகிறதே பூமி. அந்தப் பூமி உன் தாய்க்குச் சமம்." - அன்னையின் அருள்வாக்கு


"அம்மாவின் சந்நிதிக்கு வருகிறோமே! சொத்து, சுகம் கிடைக்கவில்லையே! கஷ்டங்கள் நீங்கவில்லையே! என்று உங்களில் சிலர் நினைக்கிறீர்கள். கஷ்டப்படப் படத்தான், அடி படப்படத்தான் அனுபவம் கிடைக்கும். அனுபவங்கள் மூலந்தான் எந்த உண்மையையும் அறிய முடியும், தியானத்திற்கும், ஆன்மிகப் பணிகளுக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்."- அன்னையின் அருள்வாக்கு

“Everyone should have control over one’s mind, body and food. If you control your diet then your body would be under your control; if you mediate then your mind must is controlled” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

“Do not speak of the past events in the field of spirituality! Explain to the world what happens, what is happening and the novel events that I have been bringing forth. Practice recalling them often.” – Mother Goddess Adhiparasakhi’s Oracles

"எவன் எந்தத் துறையில் இருந்தாலும், எவன் ஒருவன் மற்றவர்களுக்கு உதவி செய்கிறானோ அவன் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்." - அன்னையின் அருள்வாக்கு

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

உள்ளத்தில் தூய்மை இருக்க வேண்டும். அது இல்லாது


போனதால் தான் எங்கும் கொலை, கொள்ளை பெருகி வருகிறது.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

நாளைய உலகம்:

" நாளைய உலகம் ஆன்மிக உலகம் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன். அதற்கு ஏற்ற சூழ்நிலைகளையும் வளர்ச்சிப் பணிகளையும் நீங்கள் திட்டமிட்டுச் செய்ய வேண்டும்."

சுயநலத்திற்காகக் கூடாது:

" உங்கள் சுயநலத்திற்காக ஆன்மிகத்தைப் போர்வையாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. உண்மை உணர்வுடன் ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டும். அப்போது தான் வளர்ச்சி பெற முடியும்."


ஆன்மாவுக்குப் பால் வேற்றுமை இல்லை:

" ஆன்மா ஆண் உருவத்திலேயும் உண்டு; பெண் உருவத்திலேயும் உண்டு. ஆன்மாவில் ஆண், பெண் வேறுபாடு இல்லை. அந்த வேறுபாடு உடம்பால் அமையும் வேறுபாடே!"

1 கருத்து:

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin