வியாழன், 6 மே, 2010

சகல நன்மை பயக்கும் மீனாக்ஷி நவரத்னமாலா ஸ்தோத்ரம்




















கெளரீம் காஞ்சன பத்மினீ தடக்ருஹாம் ஸ்ரீ ஸுந்தரேஸ ப்ரியாம்

நீபாரண்ய ஸுவர்ண கர்துக பரிக்ரீடா விலோலமுமாம்

ஸ்ரீமத்பாண்ட்ய குலாசலாக்ர விலஸத் ரத்னப்ரதிபாயிதாம்

மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


[பொற்றாமரைக் குளத்தின் கரையில் கோவில் கொண்டிருபவளாயும், ஸ்ரீ சுந்தரேஸ்வரருடைய பத்னியாகவும், கதம்பவனத்தில் தங்கப் பந்தை வைத்துக் கொண்டு விளையாடுபவளும், அதிபிரகாசமுள்ள பாண்டியவம்சம் என்னும் மலையின் சிகரத்தில் விளங்கும் ரத்ன தீபமாயுள்ளவளும், பாண்டிய ராஜனது புத்ரியாகவும், மதுரைக்கு நாயகியாகவும், கையில் கிளி ஏந்தினவளாகவும் உள்ள கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]

கெளரீம் வேத கதம்ப கானன சுகீம் சரஸ்த்ராடவீ கேகினீம்
வேதாந்தாகில தர்மஹேம நளினீ ஹம்ஸிம் சிவாம் சாம்பவிம்
ஓங்காராம்புஜ நீலமத்த மதுபாம் மந்த்ராம்ர சாகாபிகாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


[வேதமாகிய கதம்பவனத்தில் கிளியாகவும், சாஸ்திரமாகிய காட்டில் மயிலாகவும், உபநிஷத்களிலுள்ள ஸமஸ்த தர்மங்களாகிற பொற்றமரைக் குளத்தில் ஹம்ஸமாகவும், பிரணவமாகிற தாமரைப்பூவில் கருத்த மதம் கொண்ட தேன் வண்டாகவும், மந்திரமாகிற மாமரக் கிளைக்கு கோகிலமாகவும் விளங்கிக் கொண்டு சுந்தரேஸ்வரரின் சக்தியாக, மதுரையின் நாயகியாய், பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]

கெளரீம் நூபுர சோபிதாங்க்ரி கமலாம் தூணீல ஸஜ்ஜங்கிகாம்
ரத்னாதர்ச ஸமான ஜானுயுகளாம் ரம்யா நிபோருத்வயாம்
காஞ்சீபத்த மனோஜ்ஞபீன ஜகனாமாவர்த்த நாபிஹ்ரதாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


[நூபுரத்தால் அழகுசேர்க்கும் பத்மம் போன்ற கணுக்காலுடையவளாய், அலங்காரமான துணி போல பிரகாசிக்கிற கைகள் உடையவளாய், ரத்னக் கண்ணாடிகளுக்கு சமமான இரண்டு முழங்கால்களுடையவளாய், வாழைமரம் போல விளங்கும் துடைகளுடன், ஒட்டியாணம் பூட்டப்பட்ட மனோஹரமான பருத்த ஜகனத்துடன் கூடியவளாய், சுழிபோலுள்ள தொப்புள் குழியுடையவளான மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]

கெளரீம் வ்யோம ஸமான மத்யமயுதாமுத்துங்க வக்ஷோருஹாம்
வீணா மஞ்ஜுன நாளிகான்விதகராம் சங்கோல்லஸத் சுந்தராம்
லாக்ஷா கர்தம சோபிபாதயுகளாம் ஸிந்தூர ஸீமந்தினீம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


[வெட்டவெளி போன்ற சமமான இடுப்பும், உயர்ந்த ஸ்தனங்களூம், வீணையின் அழகான நாளிகைஇல் வைக்கப்பட்ட கைகளும், சங்கம் போன்ற அழகிய கழுத்தும், அரக்கு குழம்பினால் ஒளிரும் இரு பாதங்களும், குங்குமத்துடன் கூடிய வகிட்டினையும் உடைய மதுராபுரி நாயகி, பாண்டிய ராஜனுடைய புத்ரியான, கையில் கிளியை ஏந்திய கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]

கெளரீம் மஞ்ஜுள மீன நேத்ர யுகளாம் கோதண்ட ஸுப்ருலதாம்
பிம்போஷ்கம் ஜிதகுந்த தந்த ருசிராம் சாம்பேய நாஸோஜ்வலாம்
அர்த்தேந்து ப்ரதிபிம்ப பால ருசிராமாதர்ச கண்ட ஸ்தலாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


[மீன்களைப் போன்ற கண்களுடையவளும், வில் போன்ற அழகான வளைந்த புருவங்களை உடையவளும், கோவஒப் பழம் போன்ற உதடுகளைக் கொண்டவளும், வெண்மல்லிகைப் பூவைப் நிகர்த்த பற்களையுடையவளும், சம்பக புஷ்பம் போன்ற மூக்கினால் ப்ரகாசிப்பவளும், பாதி சந்திரன் போன்ற நெற்றியுடன் ஒளிர்கிறவளும், முகக்கண்ணாடி போல் இருக்கும் கன்னப் பிரதேசத்தை உடையவளாகவுமான மதுராபுரி நாயகி, பாண்டிய ராஜனுடைய புத்ரியான, கையில் கிளியை ஏந்திய கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]

கெளரீம் குங்கும பங்க லேபிதலஸத் வக்ஷோஜ கும்போஜ்வலாம்
கஸ்தூரீ திலகாலிகாம் மலயஜாலேபோல்லஸத் கந்தராம்
ராகா சந்த்ர ஸமான சாரு வதனாம் லோலம்ப நீலாலகாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


[குங்கும குழம்பு பூசினாற்போன்று ஒளிரும் ஸ்தன கும்பங்களுடன் பிரகாசிப்பவளும், கஸ்தூரி திலகத்தோடு கூடிய நெற்றியுடையவளும், சந்தனம் பூசிய சோபையுடன் இருக்கும் கழுத்துடையவளும், வண்டு போன்ற கருத்துச் சுருண்ட முடியை உடையவளான மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]

கெளரீம் காஞ்சன கங்கணாங்கத தராம் நாஸா லஸன் மெளக்திகாம்
மஞ்ஜீராங்குளி முத்ரிகாங்கரி கடக க்ரைவேயகாலங் க்ருதாம்
முக்தாஹார கிரீட ரத்ன விலஸத் தாடங்க காந்த்யா யுதாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


[ஸுவர்ணத்தாலான கங்கணம், தோள்வளை இவற்றை தரித்தவளும், மூக்கில் நல்முத்தை அணிந்தவளும், பாதஸரம், விரல்களில் மோதிரங்கள், கால்களில் தண்டைகள், கழுத்தில் அட்டிகை போன்றவற்றால் அலங்காரம் செய்யப்பட்டவளும், முக்தாஹாரமும், ஒளிரும் ரத்னங்கள் உள்ள கிரீடமும், பிரகாசிக்கும் தாடங்கங்களும் கூடிய மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]

கெளரீம் சம்பக மல்லிகாஸுகுஸுயை: புந்நாக ஸெளகந்திகைர்
த்ரோணேந்தீவர குந்த ஜாதி வகுளைராபத்த சூளியுதாம்
மந்தாராருண பத்ம கேதகதள ச்ரேணீ லஸத்வேணிகாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


[சம்பகம், மல்லிகை, புன்னாகம், செங்கழுநீர், தும்பை, கருநெய்தல், குந்தம், ஜாதீ, வகுளம் ஆகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கேசத்தை உடையவளும், மந்தாரை, செந்தாமரை, தாழம்பூ இதழ் இவைகளால் வரிசையாக பின்னப்பட்ட பின்னலுடையவளுமான மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]

கெளரீம் தாடிம புஷ்பவர்ண விலஸத் திவ்யாம்பராலங்க்ருதாம்
சந்த்ராம்சூபம சாரு சாமரகர ஸ்ரீ பாரதீ ஸேவிதாம்
நாநாரத்ன ஸுவர்ண தண்ட விலஸன் முக்தாதபத்ரோஜ்வலாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


[மாதுளைப் புஷ்பம் போன்ற வர்ணமுடைய வஸ்திரத்தால் அலங்கரிக்கப்பட்டவளும், சந்திர கிரணம் போன்ற அழகான் சாமரங்களைக் கையில் ஏந்தி லக்ஷ்மியாலும், சரஸ்வதியாலும் ஸேவிக்கப்படுபவளும், பலவிதமான ரத்னங்களுடன் கூடிய தண்டத்துடன் கூடிய முத்துக் குடையுடையவளுமான மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியான, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]

வாசா வா மநஸாபி வா கிரிஸுதே காயேன வா ஸந்ததம்
மீனாக்ஷீதி கதாசிதம்ப குருதே த்வந்நாம ஸங்கீர்த்தனம்
லக்ஷ்மீஸ்தஸ்ய க்ருஹே வஸத்யனுதினம் வாணி ச வக்த்ராபுஜே
தர்மாத்யர்த்த சதுஷ்டயம் கரதலப்ராப்தம் பவேந்நிச்சய:


[அம்பிகே!, மலையவான் மகளே, வாக்கினாலோ, மனசினாலோ, சாரீரத்தினாலோ எப்போதாவது இடைவிடாமல் ஒருவன் மீனாக்ஷி என்று உனது நாமத்தைச் சொல்வானேயானால், அவனுடைய வீட்டில் லக்ஷ்மியானவள் தினந்தோறும் வசித்து வருவாள். அதேபோல், அவனுடைய முகபத்மத்தில் சரஸ்வதியும் விளங்குவாள். தர்ம, அர்த்த, காம, மோக்ஷமாகிய புருஷார்த்தங்களும் அவன் கைகளில் கிடைத்ததாகும், இது நிச்சயம்.]

சர்வே ஜனா சுகினோ பவந்து!.. சர்வ மங்களானி பவந்து.
இதி சம்ப்ரோக்ஷண மஹா கும்பாபிஷேக வைபவம் சம்பூர்ணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin