ஓம்சக்தி
அமாவாசை வேள்வி
1998 ஆண்டு ஆனி மாதம் முதல் நம் சித்தர் பீடத்தில் அமாவாசை தோறும் வேள்வி நடக்கிறது. ஓம் சக்தி மேடை
எதிரில் இந்த வேள்விப் பூசை நடக்கிறது.
பக்தர்கள் வரிசைப்படி அதர்வண பத்ரகாளி எனப்படும் பிரத்தியங்கரா தேவியை வலம் வர வேண்டும். அங்கே வேள்விக் குச்சியும், நவதானியமும் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொண்டு நம் அன்னையின் ஆலயத்தையும், பிரகாரத்தையும் சுற்றி வலம் வர வேண்டும்.
கருவறை அன்னையை தரிசித்து விட்டு வந்ததும், துளசியும், வேப்பிலையும் கொடுப்பார்கள். அவற்றை அங்கேயே சாப்பிட வேண்டும்.
ஓம்சக்தி மேடையையும், வேள்விக் குண்டத்தையும் நெருங்குவதற்கு முன்னால் நாலு கால் மண்டபத்திற்கு வரும் போதே கையில் உள்ள வேள்வி குச்சியையும், நவதானியத்தையும் கொண்டு தலையைச் சுற்றி வேள்வி குண்டத்தில் இட வேண்டும். அதுவும் எப்படி தெரியுமா?
வலமிருந்து இடப்புறம் நோக்கி மூன்று தடவை! இடப்புறமிருந்து வலப்புறம் நோக்கி மூன்று தடவை, நம் தலையைச் சுற்றி கழித்து யாககுண்டத்தில் போட வேண்டும். அந்த யாக குண்டத்தில் கலந்து கொள்வதில் பெரிய விசேஷம் இருக்கிறது. அம்மாவே அங்கே வந்து அமர்ந்து கொண்டு நமக்கு தரிசனம் கொடுக்கிறார்கள்: வேள்விப் பூசைக்கும் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.
ஏவல், பில்லி, சூனியம் துன்பங்களை வேரறுக்கும் சக்தி அந்த அதர்வண பத்ரகாளி! எல்லாவற்றையும் அம்மா ஒரு காரணத்தை வைத்துத்தான் கொடுத்திருக்கிறார்கள்.
இறந்து போன தாய் தந்தையர்க்கும், முன்னோர்க்கும் உரிய பிதிர்க்கடன்களை"பித்ரு தோஷம்" இன்றைய தலைமுறை செய்வதில்லை. அதனால் ஏற்பட்டுப் பல துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அத்தகையவர்கள் இந்த வேள்வியில் ஆகுதி கொடுப்பதன் மூலம் அந்த தோஷம் நீங்கும்.
யாக குண்டத்தில் வேள்விக் குச்சியும், நவதானியமும் செலுத்திவிட்டுப் பூசை முடிந்த பிறகு நீராடிவிட்டு அங்கப் பிரதட்சணம் வரவேண்டும். அதன்பிறகு கருவறைக்குப் பின்னாலே தியானம் செய்ய வேண்டும்.
ஓம்சக்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.