தைப்பூசம் - சக்திமாலை
இருமுடி விரதம்
அன்னை ஆதிபராசக்தி தன அவதார காலத்தில் மக்கள் நலம் பெற வேண்டிக் கொடுத்த வாய் ப்புகள் பல. அவற்றுள் சக்தி மாலை அணிந்து வி ரதம் இருந்து இருமுடி செலுத்தும் வாய்ப்பும் ஒன்று.
சக்தி மாலை அணிந்து இருமுடி ஏந்தி விரதம் இருந்து மேல்மருவத்தூர் வந்து கருவறையி ல் சுயம்பான அன்னைக்கு அவரவரும் தங்கள் கைகளால் அபிழேகம் செய்யும் வாய்ப்பு நமக்கெல்லாம் ஓர் அறிய வாய்ப்பு.
உடல் நலம் பெற, ஊழ்வினை அகல, திருமணம் நடந்தேற, மகபேறு வாய்க்க, கல்வியில் மேம்பாடு அடைய, பில்லி சூனியம் என்னும் பெரும்பகை அகல, குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் மேலோங்கிட, விவசாயத்தில் வளம் பெருகிட, தீய சகவாசம் அகன்று நல்லொழுக்கத்துடன் வாழ்ந்திட, அவரவர் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற, சக்தி மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி செலுத்தி அன்னையைச் சரணடைந்தால் அவரவர் வினைகளைக் களைந்து, விதியையும் மாற்றி அமைப்பவள் நம் அம்மா.
இருமுடி விரத முறை
1ஒரு வேளை உணவைத் தவிர்க்க வேண்டும். இரண்டு வேளை நீராடி, செவ்வாடை உடுத்தி, அன்னையைத் தொழுது வழிபட வேண்டும்.
2உறங்கும் பொது செவ்வாடை பரப்பி அதன்மீது உறங்க வேண்டும்
3.ஐம்புலன்களை அடக்கி, அன்னையின் திருநாமத்தை இடைவிடாமல் நெஞ்சில் நிறுத்தி, அன்றாடக் கடமைகளில் ஈடுபட வேண் டும்.
4காலையில் வீட்டிலுள்ள படத்திற் கு முன்பும், மாலையில் மன்றக் கூட் டு வழிபாட்டிலும் அன்னையைத் தொழுதிட வேண்டும்.
பயன்கள்
குடும்பத்தோடு அன்னையைத் தொழும் பேறு, குடும்ப அழுக்கு போக்கும். உடல் நலம் பெறலாம். ஊழ்வினை அகலும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பில்லி சூனியம் விலகும். கண் திருஷ்டி நீங்கும். கெட்ட சக்திகள் விலகும். திருவருளும் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.